தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

மீண்டும் ஜோடி சேருகின்றனர் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி

பெங்களூர்:

இந்திய டென்னிஸ் ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் உலகின்முதல் நிலை இரட்டையர் டென்னிஸ் ஜோடியான லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ்பூபதி இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து விளையாடுகின்றனர்.

ஆச்சரியப்படும் வகையில் விம்பிள்டன் உள்ளிட்ட மேலும் பல கிராண்ட் ஸ்லாாம்டென்னிஸ் போட்டிகளில் இரட்டையர் பட்டத்தை வென்று இந்தியாவுக்குப் பெருமைசேர்த்தனர் லியாண்டர் பயஸும், மகேஷ் பூபதியும்.

ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும்பிரிந்தனர். இனி ஒருபோதும் ஜோடி சேரமாட்டோம் என்று அவர்கள் அறிவித்தனர்.

அதன்படி சமீபத்தில் நடந்து முடிந்த பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் உள்பட சர்வதேசடென்னிஸ் போட்டிகளில் இருவரும் ஜோடி சேர்ந்து விளையாடவில்லை. இருவரும்தனித்தனியாக விளையாடினர்.

இந் நிலையில், பெங்களூரில் நடைபெற உள்ள ஏடிபி இரட்டையர் உலகசாம்பியன்ஷிப் போட்டியில் மகேஷ் பூபதி, லியாண்டர் பயஸ் இருவரும் இணைந்துவிளையாட உள்ளனர்.

முதல் முறையாக ஏடிபி டென்னிஸ் போட்டியின் இரட்டையர் போட்டியில் விளையாடஇந்திய ஜோடிக்கு நேரடி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இப் போட்டியின் இயக்குநரும் மகேஷ் பூபதியின் தந்தையுமான கிரிஷ்பூபதியிடமிருந்து நேரடி அனுமதிக்கான கடிதம் லியாண்டர் பயஸுக்கும், மகேஷ்பூபதிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் செப்டம்பர் மாதம் நடைபெற ஒலிம்பிக்போட்டியிலும் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் பயஸும், பூபதியும் இணைந்துவிளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரில் ஏடிபி உலக டென்னிஸ் இரட்டையர் சாம்பியன்ஷிப் போட்டிகள்நடத்துவது தொடர்பான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் கர்நாடக மாநில டென்னிஸ் சங்கம் சார்பில் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, அகில இந்திய டென்னிஸ் சங்கம் சார்பில் அனில் கன்னா, ஏடிபி டூர்டென்னிஸ் சார்பில் விஜய் அமிர்தராஜ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+