தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ஜூலை 29, 30 தேதிகளில் புதிய தமிழகம் செயற்குழுக் கூட்டம்

சென்னை:

புதிய தமிழகம் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் இம்மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் குற்றாலத்தில்நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:

புதிய தமிழகம் கட்சியியின் மாநில செயற்குழுக் கூட்டம் குற்றாலத்தில் இம் மாதம் 29 மற்றும் 30 தேதிகளிலநடைபெற உள்ளது. கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் 6-ம் தேதி நடைபெறுகிறது.

எந்த கூட்டணியில் இடம் பெறுவது என்பது குறித்த கட்சியின் நிலை செப்டம்பரில் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில்மூன்றாவது அணி இல்லை. இருப்பது இரண்டு அணிகள் தான்.

அதில் எந்த அணியில் சேர்வது என்பது பற்றி குற்றாலத்தில் நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில்முடிவெடுக்கப்படும். அந்த முடிவு செப்டம்பரில் நடைபெறும் கட்சியின் மாநாட்டில் அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கு முன் மூன்றாவது அணி அமைந்தால் அதில் புதிய தமிழகம் கட்சிபங்கேற்காது.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 17 பேர் திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் மூழ்கிஇறந்ததை நினைவுகூறும் வகையில் ஜூலை 23-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க புதிய தமிழகம் கட்சிமுடிவு செய்துள்ளது.

அந்த நாளில் திருநெல்வேலியில் கருப்புக் கொடி ஏற்றப்படும். புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் இந்தக்கருப்புதினத்தின் அடையாளமாக கருப்பு பேட்ஜ் அணிந்து திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து தாமிரபரணிஆற்றங்கரை வரை மெளன ஊர்வலம் செல்வார்கள்.

மேலும் இறந்துபோன மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நினைவிடம் அமைக்கக் கோரி தமிழகஅரசை வலியுறுத்துவோம்.

இச்சம்பவத்தில் இறந்த மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புமற்றும் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+