தமிழகத்தில் இன்று
"மத மாறாட்டத்தால்" டிஸ்மிஸ் ஆன பஞ்சாயத்துத் தலைவர்
சென்னை:
இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்ற பொய்யான சான்றிதழ் கொடுத்து பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சாமுவேலை பதவி நீக்கம் செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நக்கனேரி கிராமப் பஞ்சாயத்து, ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டதொகுதியாகும். வேறு பிரிவினர் இங்கு போட்டியிட முடியாது.
இத் தொகுதியில் போட்டியிட விரும்பிய சாமுவேல், தான் கிறிஸ்துவர் என்பதை மறைத்து தன்னை இந்து என்றும்தனது பெயரை வேலு என்றும் வாக்காளர் பட்டியலில் தனக்கு வேண்டியர்கள் மூலம் மாற்றம் செய்துவிட்டார்.
பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலிலும் வேலு என்ற பெயரிலேயே போட்டியிட்டு தலைவராகவும்தேர்ந்தெடுக்கப்பட்டார் சாமுவேல்.
சாமுவேலின் இந்த மதமாறாட்ட மோசடி பஞ்சாயத்துத் துணைத் தலைவர் ராஜேந்திரனுக்குத் தெரிய வந்தது.உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் புகார் மனு தாக்கல் செய்தார். சாமுவேலை பஞ்சாயத்துத் தலைவர்பதவியிலிருந்து உடனடியாக நீக்கவேண்டும் என்று அவர் கோரினார்.
ராஜேந்திரனின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் நீதிபதி சிவசுப்பிரமணியம், பஞ்சாயத்துத் தலைவர்பதவியிலிருந்து "வேலு" என்கிற "சாமுவேலை" டிஸ்மிஸ் செய்யும்படி உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications