தமிழகத்தில் இன்று
பிஜியில் அரசியல் நெருக்கடி - தனி அரசு அமைக்க மகேந்திர சவுத்ரி முயற்சி
வெலிங்டன்:
பிஜியில் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. புரட்சியின் மூலம் ஆட்சியிலிருந்துநீக்கப்பட்ட இந்திய வம்சாவளிப் பிரதமர் மகேந்திர சவுத்ரி தனி அரசு அமைக்கும்முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தென் பசிபிக் நாடான பிஜியில் கடந்த மே 19-ம் தேதி புரட்சி ஏற்பட்டது. பிஜிநாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சிப் படையினர்ஆயுதங்களுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்படபலரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர்.
அதன் பிறகு பிஜியில் அரசியல் மாற்றம் ஏற்பட்டது. ராணுவத்தின் கையில் ஆட்சிவந்தது. பேச்சு வார்த்தைக்குப் பிறகு பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பிஜியில்பிஜி நாட்டவர்களைக் கொண்ட இடைக்கால அரசு அமைக்கவேண்டும் என்றுபுரட்சிக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி முன்னாள் அதிபரான இலாய்லோ மீண்டும் அதிபராக நியமிக்கப்பட்டார்.அவரது தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட்டது. ஆனால், தனது ஆதரவாளர்கள்4 பேர் மட்டுமே அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டதை ஜார்ஜ் ஸ்பீட்எதிர்த்தார்.
இதையடுத்து புதிய அமைச்சரவை பதவியேற்பு நடைபெறாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தனது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் நாடுமுழுவதும் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இந் நிலையில், பிஜியின் மேற்குப் பகுதி மாகாணமான விடி லெவு தீவில் தனி அரசுஅமைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் மகேந்திர சவுத்ரி ஈடுபட்டுள்ளார்.
இதற்காக தனது மக்கள் கூட்டணிக் கட்சியின் முன்னாள் அமைச்சரவை சகாக்களுடன்சோரோகோபா என்ற கிராமத்தில் அவர் புதன்கிழமை பேச்சு நடத்தினார். தொடர்ந்துஅவர்களுடன் அவர் பேச்சு நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
ஜார்ஜ் ஸ்பீட்டும் தனது அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி தனது ஆதரவாளர்களுடன்ஆலோசனை நடத்தி வருகிறார். இதையடுத்து பிஜியில் அரசியல் நெருக்கடிதீவிரமடைந்துள்ளது.
இந்திய வம்சாவளியினருக்கும், பிஜி நாட்டவர்களுக்கும் ஏற்பட்டுள்ள இப்பிரச்சினையால் பிஜியில் உள்நாட்டுக் கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளது என்றுபுரட்சிப்படையினரின் செய்தித் தொடர்பாளர் ஜோ நாதா தெரிவித்தார்.
இதற்கிடையே, பிஜியில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து தாற்காலிகப்பிரதமர் லெய்சேனியா காராசேவை புதிய அதிபர் ராது ஜோசெஃபா இலாய்லோசந்தித்துப் பேச உள்ளார்.
இலாய்லோவின் உடல்நிலை காரணமாகவே புதன்கிழமை நடைபெற இருந்த புதியஅமைச்சரவை பதவியேற்பு ரத்து செய்யப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர்தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications