தமிழகத்தில் இன்று
அரசியல் சட்டத் தீர்திருத்தம்: ஜூலை 25-ல் முத்தரப்பு பேச்சு
கொழும்பு:
இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அமல்படுத்தப்படவுள்ள புதிய அரசியல் சட்டத் சீர்திருத்தம் குறித்து ஏற்பட்டுள்ள கருத்துவேறுபாடுகளைக் களையும் வகையில் முத்தரப்புக் கூட்டம் ஜூலை 25-ம் தேதி நடைபெற உள்ளது.
அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில ஆளும் மக்கள் கூட்டணிக் கட்சி, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிமற்றும் தமிழர் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு புதிய அரசியல சட்டத் தீர்திருத்தம் குறித்து விவாதிப்பார்கள்.
இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு அரசியல் சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது. சோதனைமுறையில் இச் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அரசியல் சட்டத் சீர்திருத்தம் குறித்து மூன்று கட்சித் தலைவர்களும் சந்தித்துப் பேச இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு முன்னதாக தமிழர் கட்சிகளை அதிபர் சந்திரிகா வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச உள்ளார். தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி(டி.யு.எல்.எஃப்.) தவிர மற்ற கட்சித் தலைவர்களை அவர் சந்திக்கிறார். டி.யு.எல்.எஃப். தலைவரை அவர் பிறகு சந்தித்துப் பேசுவார்.
அரசியல் சட்டத் சீர்திருத்தத்துக்கு புத்த பிட்சுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பழைய அரசியல் சட்டத்தில் உள்ளது போல் புத்த மதத்துக்குசலுகைகளும், உரிமைகளும் புதிய அரசியல் சட்ட சீர்திருத்தத்தில் இருக்காது என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழர்கள் அதிகம் வாழும் வடகிழக்கு மாகாணங்களில் அரசு கூறுவது போல் தமிழர்களுக்கு அதிகாரப் பங்கீடு இருக்காது என்பதால் புதிய அரசியல்சீர்திருத்தத்தை எதிர்த்துக் குரல் கொடுப்போம். அதிபர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள கூட்டத்திலும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம்என்று தமிழர் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றம் 24-ம் தேதி கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன் இப் புதிய அரசியல்சட்டத் சீர்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அதிபர் சந்திரிகா திட்டமிட்டுள்ளார்.
யு.என்.ஐ.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications