தமிழகத்தில் இன்று
18-வது திருமணம் செய்து கொண்ட கணவர் மீது 17-வது மனைவி புகார்
சேலம்:
தன்னை விட்டுவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட கணவர் மீதுபோலீஸில் மனைவி புகார் கொடுத்தார்.
விசாரணையில் அந் நபர் 18-வது முறையாகத் திருமணம் செய்து கொண்டார் என்றும்புகார் கொடுத்த பெண் அவரது 17-வது மனைவியும் என்று தெரியவந்தது.
இது பற்றிக் கூறப்படுவதாவது:
சேலம், சூரமங்கலம் அருகே உள்ள அரிக்காம்பட்டியில் வசிக்கும் குருநாதனின் மகன்மாரியப்பன். இவருக்கம் ஓமலூர்
மேலக்கண்மாப்பட்டியைச் சேர்ந்த குள்ளப்பன் என்பவரின் மகள் சரிதாவுக்கும்1997-ல் திருமணம் நடந்தது.
இந் நிலையில், சில நாட்களுக்கு முன் தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்என்ற சேலம் மாவட்ட எஸ்.பி.யிடம் சரிதா புகார் கொடுத்தார். அப் புகார் விவரம்:
1998-ம் ஆண்டு நான் கர்ப்பம் தரித்தேன். என்னை மருத்துவ பரிசோதனைக்காகஅழைத்துச் சென்ற கணவர், மருத்துவப் பரிசோதனையில் அது ஆண் குழந்தை என்றுதெரிந்தும் அந்த கருவைக் கலைத்துவிடும்படி கூறினார்.
ஆனால், நான் மறுத்துவிட்டேன். இருந்தும், எனக்கு மயக்க மருந்து கொடுக்கு எனதுசம்மதம் இல்லாமல் கருக் கலைப்பு செய்ததோடு கர்ப்பத் தடை ஆபரரேஷனும் செய்துவிட்டார்.
அதன்பிறகு அவர் என்னிடம் சந்தோஷமாக குடும்பம் நடத்தவில்லை. வெற்றுப்பத்திரங்களில் என்னை மிரட்டி கையெழுத்து வாங்கிக் கொண்டார்.
திருமணத்தின் என் பெற்றோர்கள் எனக்கு செய்து கொடுத்த நகைகள் தாலியைக்கூடஎன்னிடமிருந்து பறித்துக் கொண்டார். தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்துஉதைத்து சித்ரவதை செய்து துன்புறுத்தினார்.
அவரது கொடுமை தாங்கமல் பிறந்த வீட்டுக்குச் சென்ற என்னை, அங்கும் இருக்கவிடவில்லை. அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்ற என் மனைவியோடுதன்னைச் சேர்த்து வையுங்கள் எனக் கூறி என்னை மீண்டும் அழைத்துக் கொண்டார்.
நானும் அவர் திருந்திவிட்டதாக நினைத்தேன். ஆனால் கடந்த மாதம் என்னையும்எனது ஒரே குழந்தையான கவுசல்யாவையும் அவர் கொலை செய்ய முயன்றபோதுநான் தப்பித்து என் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன்.
இந் நிலையில் கடந்த ஜூன் மாதமே அவர் சின்னப்பன்பட்டியில் வேறொருபெண்ணைத் திருமணம் செய்து கொண்ட விவரம் தெரியவந்தது.
இது பற்றி விசாரித்தபோது என் கணவர் இது வரை 18 பேரைத் திருமணங்கள் செய்துகொண்ட விவரம் தெரிந்தது.
ஜாகீர்அம்மாபாளையத்தைச் சேர்ந்த பாப்பா என்பவரையும், கருப்பூர்பொருசமாத்துக்காட்டை சேர்ந்த விஜயா என்பவரையும் என் கணவர் ஏமாற்றிதிருமணம் செய்து கொண்டுள்ளார். மறற்வர்கள் பற்றிய விவரம் எனக்குத்தெரியவில்லை.
மாரியப்பன் மீதும் அவர் குடும்பத்தாரிடமும் விசாரணை செய்து பாதிக்கப்பட்டபெண்கள் அனைவருக்கும் நியாயம் வழங்க வேண்டும். மாரியப்பனுக்கு உரியதண்டனை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார் சரிதா.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications