தமிழகத்தில் இன்று
ரூ.220 கோடியில் நவீனமாக்கப்படுகிறது ஆவின் நிறுவனம்
சென்னை:
தமிழகத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தை நவீனப்படுத்தும் திட்டம் தேசிய பால் வள வாரியத்தின் உதவியுடன்ரூ.220 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் சுந்தரம் தெரிவித்தார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தை நவீனமயமாக்குவதற்காகன திட்டம் ரூ.220 கோடியில் செயல்படுத்தப்படஉள்ளது. இந்த திட்டத்துக்கு 220 கோடி ரூபாய் கடனுதவி கேட்டு குஜராத்தில் உள்ள தேசிய பால் வளவாரியத்திடம் விண்ணப்பித்தோம்.
இதற்காக அமைச்சர்கள் தா.கிருஷ்ணன், பொன்முடி ஆகியோருடன் நானும் குஜராத் சென்று, தேசிய பால் வளவாரியத் தலைவர் அமிர்தா படேலை சந்தித்தோம். இந்த திட்டம் பற்றி எடுத்துக் கூறினோம். அதன்படி தமிழகத்தின்கோரிக்கையை ஏற்று ரூ.220 கோடி கடனுதவி அளிக்க தேசிய பால் வள வாரியம் முன் வந்துள்ளது.
முதல் கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை கொண்டு சென்னை மாவட்டத்தில் உள்ளஆவின் நிறுவனத்தை நவீனப்படுத்த திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக ஆவின் விற்பனையை பெருக்கத்திட்டமிட்டுள்ளோம்.
அதன் பின்னர் தேசிய பால் வள வாரியத்தின் குழு ஒன்று செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தமிழகம் வந்து இத்திட்டம்பற்றி ஆய்வு செய்யும். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 28-ம் தேதி, அமிர்தா படேல் சென்னை வந்து முதல்வரைச்சந்தித்துப் பேசுகிறார்.
இந்த புதிய திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆவின் செயல்பாடுகளை நவீனப்படுத்துவதுடன்,விற்பனையையும் பெருக்க முடிவு செய்துள்ளோம்.
சென்னைக்கு வெளியே திருச்சியில் ஒரு ஐஸ் கிரீம் தொழிற்சாலையை அமைக்க உள்ளோம். தென்மாவட்டங்களுக்கான சேவையை அந்த ஆலை கவனித்துக் கொள்ளும்.
மேலும் மொரப்பூர், போளூர், சங்ககிரி, தலைவாசல், விளாங்குடி ஆகிய 5 இடங்களில் பால் குளிரூட்டும்நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
தற்போது ஆவினுக்கு தினசரி 18 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் 16 லட்சம் லிட்டர்விற்பனை ஆகிறது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் 29 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, 26லட்சம் லிட்டர் விற்பனை செய்ய முடியும் என்றார் அமைச்சர்.
பேட்டியின் போது அமைச்சர் பொன்முடி உடனிருந்தார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications