தமிழகத்தில் இன்று
வீராணம் திட்டத்தை "அம்போ" என்று விடுவதா?
சென்னை:
நான் கொண்டு வந்த திட்டம் என்பதால் புதிய வீராணம் குடிநீர் திட்டத்தை கருணாநிதி கை கழுவிவிட்டார் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாகுற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெள்ளிக் கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை நகரில் ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால், எனது ஆட்சிக் காலத்தில் உலக வங்கி ஒப்புதலுடன் ரூ.1600கோடி மதிப்பில் கொண்டு வரப்பட்ட புதிய வீராணம் திட்டத்தை கருணாநிதி புறக்கணித்துள்ளார்.
கிருஷ்ணா நதி நீர்த் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்த நேரத்தில் புதிய வீராணம் திட்டத்தையும் நிறைவேற்றி இருந்தால் சென்னையின் குடிநீர் பிரச்சினையைமுற்றிலுமாக தீர்த்து வைத்திருக்க முடியும்.
வீராணத்தில் தொடங்கி சென்னை வரை வழிநெடுக உள்ள மக்களின் தாகத்தையும் போக்கியிருக்க முடியும். என்னுடைய அந்த நல்ல நோக்கத்தில் மண் வாரிப்போட்டவர் கருணாநிதி.
அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் எனக்கு பெருமை வந்து விடும் என்பதால்தான் அதை அவர் கண்டுகொள்ளவில்லை.
விவசாயிகளுக்கு நன்மை அளிக்கவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் தக்க வகையில் உருவாக்கப்பட்ட புதிய வீராணம் திட்டம் குறித்து 1996-ல்ஆட்சிக்கு வந்த கருணாநிதி என்ன சொன்னார்?
கிருஷ்ணா நீர் திட்டத்தால் 12 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கப் போகிறது. அந்நிலையில் புதிய வீராணம் திட்டம் எதற்கென்று வசனம் பேசினார்.
கருணாநிதி ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டதே. 12 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்ததா? கருணாநிதி ஆட்சியில் நடந்த விளம்பர நாடகத்தைதவிர வேறு முன்னேற்றம் ஏதுமில்லை.
புதிய வீராணம் திட்டத்தை கை விட்டதற்கு கருணாநிதி சொன்ன காரணம் பொய்யாகி விட்டது.
விழுப்புரம், கடலூர் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சனையோடு திண்டிவனம், மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை என்று தமிழகத்தின்வடபகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நான் கொண்டு வந்த புதிய வீராணம் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்றார் ஜெயலலிதா.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications