தமிழகத்தில் இன்று
ஏற்றுமதியை அதிகரிக்க யோசனை கூறுகிறார் மத்திய அமைச்சர்
டெல்லி:
கைவினைப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க புதிய மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொள்ளும்படி ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய ஜவுளித் துறைஅமைச்சர் காஷிராம் ராணா யோசனை கூறியுள்ளார்.
மோராதாபாத்தில் கைவினைப் பொருட்களுக்கான புதிய வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தி மேம்பாட்டு மையத்தை அவர் தொடங்கி வைத்துப்பேசியதாவது:
இந்திய கைவினைப் பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இருப்பினும் ஏற்றுமதியை இன்னும் அதிகரிக்க ஏற்றுமதியாளர்கள் முயற்சிமேற்கொள்ளவேண்டும்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்திய கைவினைப் பொருட்கள் அதிகம் ஏற்றுமதி ஆவதில்லை. அந்த மாதிரியான நாடுகளுக்கு புதிய வடிவங்களில்கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்து அதிகம் ஏற்றுமதி செய்தால் ஏற்றுமதி அதிகரிக்கும்.
கனடா, இஸ்ரேல் போன்ற இந்திய கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு அதிக வாய்ப்புள்ள நாடுகளைக் கண்டறிந்து ஏற்றுமதி செய்தால் ஏற்றுமதிசதவீதம் அதிகரிக்கும். அதற்கு கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கு மத்திய அரசு உதவி செய்யும்.
கைவினைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் மேம்பாட்டுக்கும், கைவினைக் களைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் பல திட்டங்களை மத்திய அரசுசெயல்படுத்தி வருகிறது. புதிய திட்டங்களும் தீட்டப்பட்டு வருகின்றன.
நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் முடிய ரூ. 1425 கோடி மதிப்புள்ள கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில்ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பைவிட 17.65 சதவீதம் அதிகமாகும்.
2000-2001-ம் ஆண்டில் ரூ. 6950 கோடிக்கு கைவினைப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டங்களால் இந்தஇலக்கு எட்டப்பட்டுவிடும் என்று நம்புகிறேன்.
தற்போது இந்திய கைவினைப் பொருட்களுக்கு அதிக வரவேற்பு உள்ள ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க திட்டங்கள்தீட்டப்பட்டுள்ளன என்றார் காஷிராம் ராணா.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications