தமிழகத்தில் இன்று
வாழப்பாடியைத் தாக்கிய 13 பா.ம.க தொண்டர்கள் கைது
சென்னை:
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடிராமமூர்த்தியின் கார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியைச்சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் அருகே வாழப்பாடி ராமமூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த கார்கள்மீது ஞாயிற்றுக்கிழமை இரவு சிலர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து திங்கள்கிழமைசென்னையில் முதல்வர் கருணாநிதியை, வாழப்பாடி ராமமூர்த்தி சந்தித்து சம்பவத்திற்குக்காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று கோரினார்.
இச்சம்பவம் குறித்து வாழப்பாடி ராமமூர்த்தி கூறுகையில், சம்பவத்திற்குக்காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்துள்ளார்என்றார். இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 13 பேரை போலீஸார்கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, வாழப்பாடி ராமமூர்த்திக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றுதமிழக அரசுக்கு, தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கட்சியின்துணைத் தலைவர் டி.எஸ்.கிள்ளிவளவன் வெளியிட்ட அறிக்கையில், தாக்குதல்சம்பவத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சிதான் காரணம்.
சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக வாழப்பாடியும், மற்றவர்களும் காயமின்றித் தப்பினர்.ஆனால் சில கார்கள் சேதமடைந்தன என்று கூறப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications