தமிழகத்தில் இன்று
விஜயலட்சுமியின் "சாதனைப் படிகள்"
சென்னை:
இந்தியாவின் முதல் பெண் செஸ் கிரான்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்றுள்ள விஜயலட்சுமி சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் இரண்டாம் நிலை வீரரான விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு சென்னையைச் சேர்ந்த ஒருவர் இந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
21 வயதான விஜயலட்சுமி, 4 முறை தேசிய சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். இவர் கிரான்ட்மாஸ்டர் பட்டம் பெற பல படிகளை ஏறி வந்துள்ளார்.
மூன்றரை வயதிலிருந்தே செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டு விளையாடி வருகிறார் விஜயலட்சுமி.
கிரான்ட்மாஸ்டர் ஆவதற்கான தகுதிப் புள்ளிகளை 1996-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்போட்டியிலிருந்து அவர் பெற்று வந்தார்.
ஸ்பெயின் லினாரெஸ் சாம்பியன்ஷிப் போட்டி, உதய்பூரில் நடைபெற்ற ஆசிய பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டி என அனைத்திலும் சிறப்பாக விளையாடி புள்ளிகள்பெற்றார்.
இப்போது ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் விளையாடி தேவையான புள்ளிகளைப் பெற்று இப்போது கிரான்ட்மாஸ்டராகியுள்ளார்.
தேசிய அளவில் 10 வயது, 12 வயது, 15 வயது, 16 வயது, 18 வயது, 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவுகளில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.1999-ல் தேசிய பி சாம்பியன் பட்டத்தையும், தேசிய ஜூனியர் பெண்கள் பட்டத்தையும் அவர் வென்றார்.
1994-ல் மலேஷியாவில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் 5-ம் இடம் பெற்றார். 1998-ல் 3-ம் இடம்பெற்றார்.
1999-ல் ஆசிய பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் அணிகளுக்கான பிரிவில் இந்திய அணிக்குத் தலைமையேற்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத்தந்தார்.
விஜயலட்சுமியின் அடுத்த இலக்கு ஆண்களுக்கான பிரிவில் சர்வதேச மாஸ்டர் பட்டம் பெறவேண்டும் என்பதுதான் என்று அவரது சகோதரி கூறியுள்ளார்.ஏற்கெனவே இப் பிரிவில் 2 தகுதி நிலைகளை அவர் எட்டியுள்ளார்.
இந்தியாவின் முதல் பெண் கிரான்ட்மாஸ்டராக ஆகியுள்ள தனக்கு ஒரே குறிக்கோள் பெண்கள் பிரிவில் உலக சாம்பியன் ஆக வேண்டும் என்பதுதான்என்கிறார் விஜயலட்சுமி.
வாழ்த்துக்கள் விஜி...!
யு.என்.ஐ.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications