தமிழகத்தில் இன்று
தொடர்ச்சி...
எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பீரங்கிகள் மற்றும் கையெறிகுண்டுகள் மூலம் நடத்திய தாக்குதலில் கார்கிலே கதி கலங்கியது. சில நேரம் தாக்குதல்பல நாட்களுக்குக் கூட நீடித்துள்ளது. முகம்மது ஹுசைன் என்ற மாணவர் கூறுகையில்,பாகிஸ்தானின் தாக்குதலால் எங்களது படிப்பு பாழானது. பாதுகாப்பான இடங்களைத்தேடிச் செல்வதே எங்களுக்கு முக்கியமாகி விட்டது. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.பள்ளிகள் அடிக்கடி இடம் மாற்றப்பட்டன.
கார்கிலில் ஊடுறுவிய பாகிஸ்தான் வீரர்களும், ஊடுறுவல்காரர்களும், திராஸ், முஷ்கூமற்றும் பல பகுதிகளைப் பிடித்தபோது, இனிமேல் நாங்கள் கார்கிலுக்குத் திரும்பமுடியாது என்றே நினைத்தோம். ஆனால் இந்திய ராணுவ வீரர்களின் இடைவிடாதபோராட்டம் மூலம் ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடித்து விட்டு நமது பெருமையைக்காக்க முடிந்தது என்றார்.
இந்திய வீரர்கள் பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்களை விரட்டியடித்த பிறகு பாகிஸ்தான்இப்போது அமைதியாக உள்ளது. அதற்குப் பிறகு வாலாட்டாமல் ஒழுங்காகஇருக்கிறது.
முஷ்கூ பள்ளத்தாக்கைச் சேர்ந்த சபர் அலி, பஷீர் அகமது ஆகியோர் கூறுகையில்,கடந்த ஆண்டு மே மாதம் வழக்கம் போல வயலுக்கு வேலைக்குச் சென்றுகொண்டிருந்தோம். அப்போது பாகிஸ்தான் பகுதியிலிருந்து சரமாரியாக குண்டுகள்வந்து விழுந்தன. தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு இந்தத் தாக்குதல் தொடர்ந்தது.
உயிரைப் பாதுகாக்க அனைவரும் அங்கிருந்து தப்பியோடினோம். பல நாட்களுக்குப்பிறகுதான் மீண்டும் அங்கு திரும்ப முடிந்தது. ஆனால் திரும்பி வந்தபோது,சேதமடைந்த எங்களது வீடுகளும், இறந்து கிடந்த கால்நடைகளையும்தான் காணமுடிந்தது. ஐந்து மாதங்களுக்கப் பிறகே கார்கில் பகுதியில் நிம்மதியுடன் நாங்கள் வரமுடிந்தது என்றார்.
பாகிஸ்தானிய ஊடுறுவல்காரர்களை தீரத்துடன் விரட்டியடித்த இந்திய ராணுவ,விமானப்படை வீரர்களை சிலாகித்துப் பேசுகின்றனர் கார்கில் மக்கள். அவர்களதுதீரமான தாக்குதல் காரணமாகவே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்கள் தோல்விகண்டனர் என்று பெருமையுடன் கூறுகின்றனர்.
கார்கில் போர் நடந்து தற்போது ஒரு ஆண்டு ஓடி விட்டது. இதையொட்டி நாடுமுழுவதிலும் கார்கில் தியாகிகள் நினைவு கூரப்பட்டனர். கார்கில், திராஸ் பகுதிகளிலும்பல நிகழ்ச்சிகள் நடந்தன. திராஸ்-கார்கில் எல்லையில் உள்ள பிம்பாட் என்ற இடத்திலமுக்கிய நிகழ்ச்சி நடந்தது.
கார்கில் போர் நினைவுச் சின்னம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இங்குநடந்தது. மூத்த ராணுவ அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். கார்கில் போரில் பங்குகொண்ட அதிகாரிகளும் இந்த நிகழச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, கடந்த ஆண்டு பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்கள்ஆக்கிரமித்திருந்த பகுதிகளுக்கு பத்திரிகையாளர்கள் கூட்டிச் செல்லப்பட்டு சுற்றிக்காட்டப்பட்டனர்.
நாமும் கார்கில் வீரர்களுக்கு சல்யூட் செய்வோம்...!
(கார்கில் குறித்து அறிய வேண்டுமா?....வாருங்கள் இங்கே)
-
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
"என்னை விட்டுருங்க.. "விமானப்படை வீரரின் மனைவி பலாத்காரம்.. கட்டாயப்படுத்தி மதமாற்றம்! பகீர் சம்பவம் -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்?












Click it and Unblock the Notifications