தமிழகத்தில் இன்று
சென்னை, பெங்களூர் கிரிக்கெட் பிரபலங்கள் வீட்டில் வருமான வரி சோதனை
பெங்களூர்:
கிரிக்கெட் விளையாட்டில் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக சென்னை மற்றும் பெங்களூரில் 10 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
கடந்த வாரம் கபில்தேவ், அஸாருதீன், ஜடேஜா, ஜக்மோகன் டால்மியா உள்ளிட்ட பலருடைய வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் பெங்களூரில் சுமார் 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறிய வருமான வரித்துறையின் விசாரணைப் பிரிவு அதிகாரி கே.கே.சர்மா, யார் யாருடைய வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இச் சோதனையில் சிபிஐ அதிகாரிகள் யாரும் பங்கு கொள்ளவில்லை. சென்னையிலும், பெங்களூரிலும் காலை முதல் மாலை வரை சோதனைமேற்கொண்டதாக சர்மா தெரிவித்தார்.
லண்டனில் சிபிஐ குழு
இதற்கிடையே, மேட்ச் பிக்ஸிங் குறித்து விசாரித்து வரும் சிபிஐயின் உயர் மட்டக் குழு லண்டன் சென்றுள்ளது.
சிபிஐயின் இணை இயக்குநர் ஆர்.என். சவானி மற்றும் டிஐஜி ஒய்.பி. சிங் ஆகிய இருவரும் 5 நாள் பயணமாக புதன்கிழமை லண்டன் சென்றனர்.
மேட்ச் பிக்ஸிங் தொடர்பான முக்கிய ஆதாரங்களைத் திரட்டுவதற்காக இருவரும் லண்டன் சென்றுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர்கள் இருவரும் இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவார்கள் என்று தெரிகிறது.
யு.என்.ஐ.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications