தமிழகத்தில் இன்று
தீவிரவாதிகள் போர் நிறுத்தத்தை இந்தியா கண்காணிக்கும் என்கிறார் மிஸ்ரா
வாஷிங்டன்:
ஜம்மு காஷ்மீரில் ஹிஜ்புல் மூஜாஹுதின் தீவிரவாதிகள் அறிவித்துள்ள போர்நிறுத்தத்தை இந்தியா தீவிரமாக கண்காணிக்கும் என்று
பிரதமரின் முதன்மைச் செயலாளரும், பாதுகாப்பு ஆலோசகருமான பிரிஜேஷ் மிஸ்ராதெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் கிளின்டன் இந்தியா வந்திருந்தபோது வாஜ்பாயை அமெரிக்காவருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று பிரதமர் செப்டம்பர் மாதம்அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.
பிரமதமரின் பயணம் குறித்த ஏற்பாடுகளை கவனிக்க பிரிஜேஷ் மிஸ்ரா அமெரிக்காசென்றுள்ளார். வாஷிங்டனில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மூஜாஹுதின்தீவிரவாதிகள் அறிவித்துள்ள போர்நிறுத்தம் சரியான முறையில்அமல்படுத்தப்படுகிறதா இல்லையா என்பது குறித்து இந்தியா உன்னிப்பாக கவனித்துவருகிறது.
இந்தியாதான் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்றுபாகிஸ்தான் கூறுவது தவறு. பாகிஸ்தானுடன் பேச்சு வார்ததை நடத்த எந்த நாட்டின்அனுமதியும் தேவையில்லை.
நட்பு நோக்கத்துடன்தான் லாகூர் பஸ் பயணத்தை இந்தியா மேற்கொண்டது. ஆனால்பாகிஸ்தான் அதை தவறாக பயன்படுத்தி தீவிரவாதிகளை எல்லை கடந்து கார்கிலுக்குஅனுப்பி போரை உண்டாக்கிவிட்டது.
எல்லையைக் கடந்து தீவிரவாத நட்வடிக்கையில் ஈடுபடுவதை முதலில் பாகிஸ்தான்நிறுத்த வேண்டும். அப்போதுதான் பேச்சு வார்த்தை சாத்தியம். எனவேபேச்சுவார்த்தையைத் துவங்குவது பாகிஸ்தானின் கையில்தான் உள்ளது என்று மிஸ்ராகூறினார்
எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கையை குறைத்துக்கொண்டுள்ளதா என்று கேள்விக்கு மிஸ்ரா இல்லவே இல்லை என பதிலளித்தார்.
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சாமுவேல் பெர்ஜர், இடைக்காலவெளியுறவுத்துறை அமைச்சர் தாமஸ் பிக்கரிங் மற்றும் பல உயர் அதிகாரிகளையும்மிஸ்ரா சந்தித்து பேச உள்ளார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications