தமிழகத்தில் இன்று
நெல் அறுக்கும் தகராறில் 11 பேர் படுகொலை
போல்பூர் (மேற்கு வங்காளம்):
மேற்கு வங்காள மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில், நெல் அறுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், திரினமூல் காங்கிரஸ் மற்றும் பார்வர்ட்பிளாக் கட்சித் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
போல்பூர் மாவட்ட போலீஸ் தலைமை கண்காணிப்பாளர் சுஜித் குமார் சர்கார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். இது குறித்து அவர்கூறுகையில், பார்வர்டு பிளாக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரினாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையே நெற்பயிற்களை அறுப்பது,அறுவடை முடிந்த பின் அவற்றைப் பங்கு பிரிப்பது தொடர்பாக அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன.
வியாழக்கிழமையும் இதுபோல மோதல் ஏற்பட்டது. சுஜாப்பூர் என்ற இடத்தில் நடந்த மோதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். காயமடைந்த பலர்ஆபத்தான நிலையில் உள்ளதால் சாவு எண்ணிக்கை இன்னும் உயரலாம் என்றார் சுஜித் குமார் சர்கார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications