தமிழகத்தில் இன்று
பேராசிரியரின் பேராசைக்குப் பலியான மாணவி
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் கல்லூரிப் பேராசிரியரின் ஆசைக்கு இணங்க மறுத்த எம்.எஸ்சி மாணவி பெயிலாக்கப்பட்டார்.
சென்னையைச் சேர்ந்தவர் பொன்னுராஜ். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகள் ராதா. 1998 ம் ஆண்டு வந்தவாசியிலுள்ள அகிலாண்டேஸ்வரிகல்லூரியில் ராதா எம்எஸ்சி வகுப்பில் சேர்ந்தார்.
கல்லூரியில் சேர்ந்த நாள் முதல், கல்லூரி நிர்வாகம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாலும், விடுதியில் அதிகப் பிரச்சனைகள் இருந்ததாலும்ராதாவின் பெற்றோர் அவருக்கு கல்லூரி அருகிலேயே வீடு எடுத்துக் கொடுத்து தங்க வைத்தனர்.
விடுதியிலிருந்து விலகியதால் ராதா கல்லூரி நிர்வாகத்தின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டாள். ராதாவின் கல்லூரி பேராசிரியர் காளிதாஸ் ராதாவிடம்தவறாக நடந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அவரது விருப்பத்திற்கு இணங்குமாறும், இல்லாவிட்டால் செய்முறைத் தேர்வில் மதிப்பெண்கள் போடாமல்பெயிலாக்கி விடுவேன் என்றும் கூறியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து ராதா, கல்லூரி முதல்வர் சாவித்திரி தேவராஜிடம் புகார் கொடுத்தார். ஆனால், முதல்வரோ, மதிப்பெண் போட வேண்டுமானால் ஒருபாடத்திற்கு 4,500 ரூபாய் கட்டவேண்டும் என்று கூறினார். ராதா பணம் கட்டவில்லை. இதையடுத்து அவர் பெயிலாக்கப்பட்டார்.
இது குறித்துக் கேட்பதற்காக ராதாவின் தாய் சரஸ்வதி திருவண்ணாமலைக்கு வந்தார். அப்போது கல்லூரி நிர்வாகம் அவரை அடித்ததாகத் தெரிகிறது.இதற்குக் கல்லூரி தாளாளர் சுகுணா உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இவர்கள் மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கல்லூரி மாணவி ராதாவின் பெற்றோர் திருவண்ணாமலை போலீசில் புகார்கொடுத்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications