தமிழகத்தில் இன்று
ஹூசைனியைக் கொடுமைப்படுத்தவில்லை...சென்னை போலீஸ் கமிஷனர்
சென்னை:
சென்னையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது போலீஸார் அடித்து துன்புறுத்தினார்கள் என்று கராத்தேஹூசைனி புகார் கூறியிருப்பது அப்பட்டமான பொய் என்று நகர போலீஸ் கமிஷனர் பி.காளிமுத்து நிருபர்களிடம்தெரிவித்தார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
மதுரையைச் சேர்ந்த ஹூசைனி எம்.ஏ. பட்டம் பெற்றவர். அவர் அண்மையில் ஹைபுரொபைல் என்ற அமைப்பைஏற்படுத்தினார். அதில் சேர்ந்து பயிற்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ 3500 உதவித்தொகை வழங்கப்படும் என்றுபத்திரிக்கைகளில் கவர்ச்சியான முறையில் விளம்பரங்கள் செய்திருந்தார்.
இவரை நம்பி ஏராளமான பெண்கள் உள்பட பலர் இவரது ஹைபுரொபைல் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தனர்.ஆனால், பயிற்சி பெறுபவர்கள் யாருக்கும் இவர் உதவித்தொகை கொடுக்கவில்லை. இதைத் தட்டிக்கேட்டவர்களை அடித்து கொடுமைப்படுத்தினார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் தான் போலீஸ் அவரைக் கைது செய்தது. போலீஸ்நிலையத்தில் தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரால் பூட்ஸ் காலால் அடித்து உதைத்துக்கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், அவருக்குக் குடிப்பதற்கு சிறுநீர் கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறுவதெல்லாம்அப்பட்டமான பொய்.
மாநில அரசு, போலீஸ், மற்றும் பொதுமக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காகத் தான் அவர் இப்படியெல்லாம்கூறுகிறார். இவர் மீது சட்டம் தனது நடவடிக்கையை எடுக்கும் என்றார் கமிஷனர்.
இதற்கிடையே ஜாமினில் வெளிவந்துள்ள ஹூசைனி கூறுகையில், போலீஸார் தனக்கெதிராக எப்.ஐ.ஆர். பதிவுசெய்து, குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். தனக்கு ஏதாவது ஆபத்துஏற்பட்டால் அதற்கு தமிழக அரசு தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications