தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

உண்ணாவிரதம் இருந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் மயக்கம்

கோவை:
தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அரசு அனுமதி அளிப்பதை எதிர்த்து தொடர்உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வரும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்களில்17 பேர் மயக்கமடைந்தனர்.

தமிழ்நாட்டில் தனியார் சட்டக் கல்லூரிகளைத் திறக்க அனுமதிக்கக் கூடாது எனக்கோரி கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் 40 பேர் ஜூலை 24ம் தேதி முதல் தொடர்உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

மாணவர்களின் போராட்டம் காரணமாக கோவை சட்டக் கல்லூரிக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளது. இருந்த போதிலும், மாணவர்கள் கல்லூரி முன்பு தொடர்உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்களில் 4 மாணவிகள் உட்பட 17மாணவர்கள் மயக்கமடைந்தனர். இவர்கள் உடனடியாக மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பிரதிநிதிகளுடன்மாவட்ட கலெக்டர் சந்தானம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே, அங்கீகாரம் பெறாத சட்டக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து படிக்கவேண்டாம் என அம்பேத்கார் சட்டப் பல்கலைக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பல்கலைக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில், அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தின் அனுமதியின் பேரில் மட்டுமே தமிழகத்தில் சட்டக் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன.

தனியார் கல்லூரிகள் எதற்கும் இதுவரை அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. எனவேசட்டப் படிப்பிற்கு சேரும் மாணவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனக்கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+