தமிழகத்தில் இன்று
அரசியல் சட்டத் திருத்தத்துக்கு விக்கிரமசிங்கே திடீர் எதிர்ப்பு
கொழும்பு:
இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கொண்டு வந்துள்ள புதிய அரசியல் சட்டத் திருத்தத்துக்கு முக்கியஎதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
தனி ஈழம் கேட்டுப் போராடு வரும் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடந்த 17 ஆண்டுகளாகச் சண்டை நடந்து வருகிறது.இச் சண்டையில் 60 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர்.
இப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு புதிய அமைதித் திட்டத்தை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கொண்டு வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம்கொண்டு வரப்பட்ட இத் திட்டத்தின் படி அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்து, தமிழர்களுக்கும் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இத் திட்டத்தை எதிர்க்கட்சிகளும், புத்த பிட்சுக்களும் கடுமையாக எதிர்த்தனர். தவிர, சில தமிழர் கட்சிகளும் இதை எதிர்த்தன.
முதலில் இத் திட்டத்தை எதிர்த்த ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான முக்கிய எதிர்க்கட்சி ஐக்கிய தேசிய கட்சி பின்னர் இதை ஏற்றுக் கொண்டது.
அனைத்துத் தரப்பு மக்களின் கருத்தை ஏற்கும் விதமாக அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசி முடிவு எடுக்கப்படும் என்று அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா அறிவித்தார். இதையடுத்தே இத் திட்டத்தை ஐக்கிய தேசிய கட்சி ஏற்றுக் கொண்டது.
ஆனால், கடந்த வாரம் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. அதிபர் சந்திரிகாவுடன் நடந்த பேச்சுவார்த்தையை ஐக்கிய தேசிய கட்சித்தலைவர் ரனில் விக்ரமசிங்கே புறக்கணித்தார்.
இப்போது அதிபர் சந்திரிகாவின் புதிய திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளுடன் பேசி ஆலோசனை நடத்திய பிறகுதான் புதிய திட்டத்தைஅதிபர் சந்திரிகா அமல்படுத்தவேண்டும்.
அதை விடுத்து நாடாளுமன்றத்தின் மூலம் அதிரடியாக அதை நிறைவேற்ற முயன்றால் அதை ஐக்கிய தேசிய கட்சி கடுமையாக எதிர்க்கும் என்று ரனில்விக்ரசிங்கே கூறியுள்ளார்.
அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அரசின் பதவிக் காலம் டிசம்பரில் முடிவடைகிறது. அதற்குள் புதிய சட்டத் திருத்தத்தை அமல்படுத்தவேண்டும் என்று அவர்விரும்புகிறார். அதற்கான நடவடிக்கைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
ஆனால், இப்போது முக்கிய எதிர்க்கட்சியின் எதிர்ப்பால் அமைதித் திட்டம் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பிரச்சினை இப்படி உள்ள நிலையில், லண்டனுக்குத் தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ள சந்திரிகா குமாரதுங்கா எப்போது இலங்கை திரும்புவார்என்று தெரியவில்லை.
கடந்த வாரம் தன்னுடன் பேச்சு வார்த்தை நடத்திய ஆதரவு தமிழ்க் கட்சிகளிடம் ஆகஸ்ட் 3-ம் தேதி தனது அமைதித் திட்டத்தை நிச்சயம்நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன் என்று சந்திரிகா கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, புதிய அமைதித் திட்டதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசியவாத சிங்க ஊர்மயா கட்சி வரும் சனிக்கிழமை மாபெரும் பேரணி நடத்த உள்ளது.
இக் கட்சி தவிர புத்த மதத் தலைவர்கள் எல்லாம், அதிபரின் புதிய திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வாக்களிக்கவேண்டும் என்று நாடாளுமன்றஉறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications