தமிழகத்தில் இன்று
டெல்லியில் மாநிலங்களிடை தடகளப் போட்டிகள்
சென்னை:
மாநிலங்களுக்கு இடையேயான அதலெடிக்ஸ் போட்டிகள் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகின்றன.
சனிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு இப் போட்டிகள் நடைபெறும். அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இதில் கலந்துகொள்கின்றனர்.
ஜகார்த்தாவில் ஆசிய தடகளப் போட்டி விரைவில் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து சிட்னியில் செப்டம்பர் மாதம் ஒலிம்பிக் போட்டி நடைபெறஉள்ளது.
இந்த இரு போட்டிகளிலும் கலந்து கொள்ள தகுதி பெற இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு இதுதான் கடைசி தகுதிப் போட்டி என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஆகவே, அனைத்து மாநில வீரர் மற்றும் வீராங்கனைகளும் சர்வதேச போட்டிகளுக்குத் தகுதி பெற இப் போட்டியில் தங்களது முழு திறமையைக் காட்டஉள்ளனர்.
இந்திய அமெச்சூர் தடகள அமைப்பு சில தகுதிகளை நிர்ணயித்துள்ளது. இந்த தகுதிகளை எட்டும் வீரர் மற்றும் வீராங்கனைகள் மட்டுமே சர்வதேசபோட்டிகளுக்கு அனுப்பப்படுவர்.
டெல்லியில் நடைபெறும் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியின் கடைசி நாளன்று ஜகார்த்தா போட்டிக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படவுள்ளது.
ஏற்கெனவே சிட்னி ஒலிம்பிக்குக்கு 60 பேர் கொண்ட இந்திய அணி பங்கு கொள்ளும் என்றும் அதில் 20 முதல் 22 பேர் தடகளப் போட்டிகளில் கலந்துகொள்வார்கள் என்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில், ஜகார்த்தா போட்டிக்கு தகுதி வாய்ந்த வீரர் மற்றும் வீராங்கனைத் தேர்வு செய்யகூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றார் தமிழ்நாடு அமெச்சூர் அதலெடிக் சங்கத் தலைவர் டபிள்யு.ஐ. தேவாரம் தெரிவித்தார்.
இந்திய அமெச்சூர் அதலெடிக் சங்கம் நிர்ணயித்துள்ள தகுதிகளை பல வீரர் மற்றும் வீராங்கனைகள் எட்டியுள்ளனர் என்றாலும், டெல்லியில் நடைபெற உள்ளபோட்டி அவர்களுக்கு கூடுதல் பயிற்சியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
டெல்லியில் நடைபெறும் போட்டியில் தேசிய சாதனைகளும், மாநிலங்களுக்கு இடையேயான பல புதிய சாதனைகளும் ஏற்படுத்தப்படும் என்றுநம்பப்படுகிறது.
யு.என்.ஐ.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications