தமிழகத்தில் இன்று
போர்நிறுத்தத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
வாஷிங்டன்:
காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதின் போர் நிறுத்தம் அறிவித்துள்ள இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு காஷ்மீர்பிரச்சனைக்குத் தீர்வு கண்டு அங்கு வாழும் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று அமெரிக்காவிலுள்ள தெற்காசியவிவகாரங்களுக்கான ஆலோசனைக் குழு இந்தியாவுக்கு அறிவுரை கூறியுள்ளது.
ஆலோசனைக் குழுத் தலைவர் மைக்கேல் க்ரிப்பன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
பாகிஸ்தான் ஆதரவு ,ஹிஸ்புல் முஜாஹிதின் தீவரவாத அமைப்பு போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையை இந்தியா பயன்படுத்திக் கொண்டுநீண்ட காலமாக உள்ள காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண முயல வேண்டும். காஷ்மீர் மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இந்திய அரசுசெயல்பட வேண்டும்.
முஜாஹிதின் அமைப்பின் போர்நிறுத்தம் சரியானதா, உள்நோக்கம் கொண்டதா என்று ஆராய்ந்து கொண்டிருக்காமல் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதையேகருத்தில் கொள்ள வேண்டும். காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகள் என அனைத்துத் தரப்பினரும் சேர்ந்துசெயல்பட வேண்டும்.
பாகிஸ்தானும், ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாத அமைப்பு உள்பட பிற தீவிரவாத அமைப்புக்களுக்கு ஆயுத உதவியோ, பிற உதவிகளோ செய்யக் கூடாது.
இந்தியாவும், காஷ்மீர் பிரச்சனை தொடர்பான நடவடிக்கைகளை வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும். காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களைதீவிரவாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications