தமிழகத்தில் இன்று
கட்சியாக மாறுகிறது முதலியார் பேரவை
பாண்டிச்சேரி:
அனைத்து முதலியார் பேரவை விரைவில் கட்சியாக மாறும் என்று அந்த அமைப்பின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
பாண்டிச்சேரியில், செய்தியாளர்களிடம் சண்முகம் பேசுகையில், அனைத்து முதலியார் பேரவை அமைப்புக்குக் குறுகிய காலத்திலேயே சிறப்பான வரவேற்புகிடைத்துள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் தொடர்ந்து மாநாடு நடத்தி வருகிறோம்.
மே 7 ம் தேதி குடியாத்தத்தில் முதல் மாநாடு நடந்தது. அமைப்பு துவங்கி 80 நாட்கள் ஆகிறது. இதுவரை 9 தொகுதிகளில் மாநாடு நடத்தியுள்ளோம். 42இடங்களில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தியுள்ளோம்.
நாங்கள் சமாதான விரும்பிகள். ஒரு போதும் வன்முறையில் இறங்க மாட்டோம். சாதி அமைப்புகளைத் தடை செய்ய தமிழக அரசு முயல்கிறது. அப்படிநடந்தால், அடுத்த நொடியே எங்கள் அமைப்பு கட்சியாக உருவெடுக்கும்.
பொன்னேரியில் எங்களது மாநாட்டுக்குத் திரண்ட கூட்டத்தைப் பார்த்த பின் தான் ஜாதிக் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார். செப்டம்பர் 15 ம் தேதி அண்ணா பிறந்தநாளன்று தென்சென்னை மாவட்டம் சார்பில் நடக்கும் மாநாட்டில் எங்கள் அமைப்பு கட்சியாகஅறிவிக்கப்படும். கட்சியின் பெயர், கொடி ஆகியவை மாநாட்டின் போது அறிவிக்கப்படும்.
கட்சியாக உருவானபின் முக்கிய பொறுப்புக்களை சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் வழங்கத்தீர்மானித்துள்ளோம். எங்கள் கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் மாதம் சென்னையில் நடத்தப்படும்.
முன்பு முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த 15 பேர் எம்.பிக்களாக இருந்தனர். 10 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இருந்தனர். இப்போது ஒரு முதலியார்மட்டுமே எம்பியாக உள்ளார்.
தமிழகத்தில் எங்கள் சமுதாய மக்கள் இரண்டு கோடிக்கும் மேல் உள்ளனர். இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.அடுத்த சட்டசபைத் தேர்தலில் எங்கள் கட்சியும் போட்டியிடும் என்றார் சண்முகம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications