தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

பெங்களூருக்கு வருகிறது மெட்ரோ பஸ்

பெங்களூர்:

பெங்களூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மெட்ரோ பஸ்களை விட பெங்களூர் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.

380 புதிய பஸ்கள் இந்த மெட்ரோ போக்குவரத்துக் கழகத்தில் இருக்கும். பெங்களூரில் 1971 ம் ஆண்டு 16.5 லட்சமாக இருந்த மக்கள்தொகை2000 மாவது ஆண்டில் 60 லட்சத்தை எட்டியுள்ளது. 2010 க்குள் 70 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அனைத்துமக்களுக்கும் பயன்படும் வகையில் போக்குவரத்து வசதிகள் செம்மையாக இல்லை. நகரில் 12 லட்சம் பயணிகள் அரசு பஸ்சை நம்பியுள்ளனர்.

12.5 லட்சம் மக்கள் தனியார் பஸ்கள், வேன்கள், மற்றும் இரண்டாவது பிடிஎஸ் என்று வர்ணிக்கப்படும் ஆட்டோக்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அரசு பஸ்சான பிஎம்டிசி பஸ்களில் 60 இருக்கைகள் மட்டுமே உள்ளன. இதனால் பஸ்களில் பயணிகள் பயணம் செய்வது மிகவும் கடினமாக இருப்பதுடன் உரியநேரத்தில் போக வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர முடிவதில்லை.

பயணிகளின் இப்பிரச்சனையைப் புரிந்து கொண்டு அவர்கள் பயனடையும் விதத்தில் புதிய நவீன ரக மெட்ரோ பஸ் வசதியை அறிமுகப்படுத்த பெங்களூர் பஸ்போக்குவரத்து திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்துக் கழகம் பெங்களூரில் நடத்திய கணக்கெடுப்பில் பஸ் பயணிகள் பிரச்சனைகள் பல தெரிய வந்தன. குறைந்தபட்சம் 380 க்கும் மேற்பட்ட பஸ்களாவது அதிகமாக வேண்டும் என்று மத்திய போக்குவரத்துக் கழக கணக்கெடுப்பு கூறியது.

இதன்படி அதிநவீன வசதிகளுடன் கூடிய 380 மெட்ரோ பஸ்களை விட பெங்களூர் பஸ் போக்குவரத்துக் கழகம் தீர்மானித்துள்ளது.

மெட்ரோ பஸ்கள் மிக வேகமாகச் செல்வதுடன் அனைத்து நிறுத்தங்களிலும் நிற்கும். இருக்கை வசதிகள் 150 முதல் 270 வரை இருக்கும். இந்த பஸ்கள்ஒரு மணி நேரத்தில் 8000 முதல் 10, 000 பயணிகள் பயனடையும் விதத்தில் நகரின் பல்வேறு முக்கிய சாலைகளில் விடப்படும். செப்டம்பர் மாதம் முதல்இந்த மெட்ரோ பஸ்கள் விடப்படும்.

இதனால் பயணிகள் பஸ் நிறுத்தத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. நெருக்கடி அதிகமான பஸ்களில் பயணம் செய்ய வேண்டிய அவசியமும்இல்லை. மேலும் இந்த மெட்ரோ பஸ்கள் தற்போது இயங்கி வரும் புஷ்பக் பஸ்களைப் போன்று இருக்கும்.

தற்போது பெங்களூர் நகரில் ஜனபிரிய வாகினி என்ற கண்டக்டர் இல்லாத 38 பஸ்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் எண்ணிக்கையை 100 ஆகஉயர்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+