தமிழகத்தில் இன்று
நடிகர் அஜீத் காயம்
சென்னை:
சிட்டிசன் படப்பிடிப்பின்போது கீழே விழுந்ததில் நடிகர் அஜீத்துக்கு காயமேற்பட்டது. இதனால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
அமராவதி படத்தில் அறிமுகமாகி படிப்படியாக முன்னேறி நல்ல நடிகராக மட்டுமல்ல வெற்றிப்பட கதாநாயகனாக பவனி வருபவர் அஜீத்.காதல்கோட்டை, வாலி உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்ததன் மூலம் சிறந்த நடிகராக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டார்.
அமர்க்களம் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த ஷாலினியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அஜீத் தற்போது சிட்டிசன் படத்தில் நடித்து வருகிறார்.இதில் 9 பாத்திரங்களில் அவர் நடிக்கிறார். அதில் ஒரு பாத்திரத்தில் மொட்டை அடித்துக் கொண்டு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிட்டிசன் படப்பிடிப்பு வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. அதற்காக, இரவு பகலாக அஜீத் நடித்து வருகிறார். இந்நிலையில் இப் படத்தின்படப்பிடிப்பு சென்னை அண்ணா சாலையில் நடைபெற்றது.
போலீஸ்காரர் ஒருவரை ஏமாற்றிவிட்டு அஜீத் ஓடுவது போலவும் அவரை போலீஸர் துரத்திச் செல்வது போலவும் காட்சி படமாக்கப்பட்டது.வேகமாக ஓடிக் கொண்டிருந்த அஜீத் திடீரென்று கால் இடறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் தசையில் பிடிப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பை நிறுத்திவிட்டுதனது காரில் உட்கார்ந்தார் அஜீத். ஆனால், அவரது காலில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டஅஜீத்துக்கு பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டன.
அஜீத்தின் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 5 நாட்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து அவர்வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். மனைவி ஷாலினி அருகிலிருந்து அஜீத்தைக் கவனித்து வருகிறார். காயமடைந்ததை அடுத்து அஜீத் நடித்து வரும் சிட்டிசன்உள்பட மற்ற படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications