தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ராஜ்குமாரை விடுவிக்க 2.5 கோடி ரூபாய் கேட்கும் வீரப்பன்
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால் ரூ. 2.5 கோடி பணமும், தன் மீதுள்ள வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று வீரப்பன்ஆடியோ கேசட்டில் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
தாளவாடி தாலுகாவிலுள்ள காஜனூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் ராஜ்குமார் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேரைக்கடத்திச் சென்ற வீரப்பன், ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவிடம் ஒரு கேசட்டைக் கொடுத்து அனுப்பியுள்ளான்.
கேசட்டில் என்ன உள்ளது என்று தெரியவில்லை. இருப்பினும் ரூ. 2.5 கோடி பணம் கொடுக்க வேண்டும் என்றும், தன் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என்றும் வீரப்பன் கோரியிருப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.












Click it and Unblock the Notifications