தமிழகத்தில் இன்று
தேர்தல் உத்தி குறித்து அமைச்சர்களுடன் கருணாநிதி ஆலோசனை
சென்னை:
தமிழக சட்டப் பேரவைக்கு விரைவில் நடைபெற உள்ள தேர்தல் குறித்து
அமைச்சர்கள் மற்றும் திமுக மாவட்டத் தலைவர்களுடன் முதல்வர் கருணாநிதிஞாயிற்றுக்கிழமை தீவிர ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தேர்தல்நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில்உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலைச் சந்திப்பதற்கான ஆயத்தப் பணிகளைமேற்கொண்டுள்ளன.
எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்ற தீவிர
ஆலோசனையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இந் நிலையில், முதல்வரும்திமுக தலைவருமான கருணாநிதி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் திமுக மாவட்டச்செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள அண்ணாஅறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் பொதுச் செயலாளரும், கல்வி அமைச்சருமான க. அன்பழகன் முன்னிலைவகித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத் தேர்தல் முடிவுகள் குறித்தும்,கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் இக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
தவிர, வர இருக்கிற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எவ்வாறு சந்திப்பது, எந்தெந்தகட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது குறித்தும் ஆலோசனைநடத்தப்பட்டது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு மக்களிடையே நிலவும் கருத்துக்கள், திமுகவுக்கு உள்ளவெற்றி வாய்ப்புகள், கூட்டணி வாய்ப்புகள் ஆகியவை பற்றி மாவட்டச்செயலர்களிடம் கருணாநிதி கேட்டறிந்தார்.
தேர்தல் கூட்டணி குறித்தும், தங்கள் தொகுதிகளில் திமுகவுக்கு உள்ள வெற்றிவாய்ப்புகள் குறித்தும் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் முதல்வரிடம்எடுத்துரைத்தனர். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்காளர் புகைப்படஅடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டள்ளது.
ஆகவே, திமுக உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை கிடைக்கமாவட்டச் செயலாளர்கள் உள்ள கட்சி நிர்வாகிகள் கவனம் செலுத்தவேண்டும் என்றும்அடையாள அட்டை கிடைக்காத மக்களுக்கு அடையாள அட்டை கிடைக்க திமுகபிரகர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
சுமார் இரண்டரை மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு கட்சியின் பொருளாளரும், மின்துறை அமைச்சருமான ஆர்க்காடுவீராசாமி தனியாக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications