தமிழகத்தில் இன்று
மீண்டும் வீரப்பனை சந்திக்க போகிறார் நக்கீரன் கோபால்?
சென்னை:
கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டது தொடர்பாக பேச்சு நடத்த 8நாட்களுக்குள் தூதரை அனுப்பவேண்டும் என்று அவரையும் மேலும் 3 பேரையும்கடத்திச் சென்றுள்ள சந்தனக் கடத்தல் வீரப்பன் கெடு விதித்துள்ளான்.
இத் தகவலை தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாஇருவரும் சென்னையில் நிருபர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:
பிரபல கன்னட நடிகரையும் மேலும் 3 பேரையும் சந்தனக் கடத்தல் வீரப்பன்கடத்தியுள்ள சம்பவம் கர்நாடக மக்களுக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கும்அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கக்கூடியதாகும்.
சந்தனக் கடத்தல் வீரப்பனோடு உரிய முறையில் தொடர்பு கொண்டு கடத்தப்பட்ட 4பேரையும் மீட்கும் நடவடிக்கையில் இரு மாநில அரசுகளும் இணைந்து தீவிரமாகஈடுபடும்.
இரு மாநில மக்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து ராஜ்குமாரையும் அவருடன்கடத்திச் சென்றுள்ள மற்றவர்களையும் வீரப்பன் விடுதலை செய்வார் என்றுஎதிர்பார்க்கிறோம்.
கர்நாடக, தமிழக அரசுகளும், மத்திய அரசும் கலந்து பேசி கடத்தப்பட்டவர்களைமீட்கும் முயற்சிக்கு இரு மாநில மக்களும் அமைதிகாத்து ஒத்துழைப்புத் தரும்படிகேட்டுக் கொள்கிறோம்.
வீரப்பன் கொடுத்தனுப்பியுள்ள கேஸட்டில், 8 நாட்களுக்குள் ஒரு தூதரைஅனுப்பும்படி கூறியுள்ளார். மற்றபடி வேறு எந்த கோரிக்கைகளையும் அவர்தெரிவிக்கவில்லை.
இது ஒரு அரசியல் பிரச்சினை அல்ல. ஆகவே அதை மனதில் வைத்தே இரு மாநிலஅரசுகளும் செயல்படும். யாரைத் தூதராக அனுப்புவது குறித்து இன்னும் நாங்கள்முடிவு செய்யவில்லை. ஆனால், அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் யாரைத்தூதராக அனுப்புவது பற்றி முடிவு செய்யப்பட்டுவிடும்.
இரு மாநில மக்களும் அமைதி காத்தால்தான் இப் பிரச்சினையில் சுமூகமான தீர்வுகாணமுடியும். வீரப்பன் பிடியில் உள்ள ராஜ்குமாரின் உடல்நலை பற்றி இதுவரைஎந்தத் தகவலும் இல்லை. ஆனால், அவரைக் கடத்தும்போது ராஜ்குமாரின் உடலுக்குஎந்த பாதிப்பும் இருக்காமல் பார்த்துக் கொள்வதாக வீரப்பன் கூறியுள்ளார்.
வீரப்பனைச் சந்திக்க நக்கீரன் கோபால் மீண்டும் அனுப்புவது குறித்து இன்னும் நாங்கள்முடிவு செய்யவில்லை. இப் பிரச்சினை குறித்து அவரிடம் பேசுவோம். அவர்மறுபடியும் தூதராக அனுப்பப்படலாம். அனுப்பப்படக்கூடும்.
ராஜ்குமார் கடத்தப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்குமாருக்கு ஏற்கெனவே சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து மிரட்டல் உள்ளது.அப்படியிருக்கும்போது அவர், தனது பண்ணை வீட்டுக்கு வருவது பற்றியோ அல்லதுவந்ததுபற்றி தமிழக, கர்நாடக போலீஸாருக்கோ, சிறப்பு அதிரடிப் படையினருக்கோதகவல் தெரிவிக்கவில்லை.
அதனால் தான் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கமுடியவில்லை என்றனர்.












Click it and Unblock the Notifications