தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

தமிழக வாகனங்கள் மீது தாக்குதல்

பெங்களூர்:

நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதையடுத்து, தமிழகத்திலிருந்து கர்நாடகம் வந்தபஸ்கள், பிற வாகனங்கள் தாக்கப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை இரவு காஜனூரிலிருந்து ராஜ் குமார் வீரப்பன் கும்பலால்கடத்தப்பட்டார். இந்தச் செய்தி திங்கள்கிழமை காலை கர்நாடக மாநிலம் முழுவதும்பரவியது. இதையடுத்து ராஜ்குமார் ரசிகர்கள் வன்முறையில் இறங்கினர்.

பெங்களூர் நகர் முழுவதும் வன்முறை வெடித்தது. தமிழகத்திலிருந்து கர்நாடகம் வந்தபஸ்கள், தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களை வன்முறைக் கும்பல் தாக்கியது.

தியேட்டர்களில் படங்கள் நிறுத்தம்

இதற்கிடையே, நடிகர் ராஜ்குமார் பத்திரமாக மீட்கப்படும் வரை கர்நாடகத்தில்திரையுலகம் சம்பந்தமான எந்தப் பணிகளும் நடக்காது, தியேட்டர்களிலும் படங்கள்திரையிடப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்குமார் கடத்தல் விவகாரம் வெளியான தகவலையடுத்து இந்த முடிவை கர்நாடகத்திரைப்பட வர்த்தக சங்கம் எடுத்தது. சங்கத் தலைவர் கே.சி.என்.சந்துரு இதுகுறித்துக்கூறுகையில், ராஜ்குமார் பத்திரமாக திரும்பும் வரை கன்னட திரையுலகின் அனைத்துநடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும். தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்படும்.ராஜ்குமார் திரும்பும் வரை இது நீடிக்கும்.

எங்களுக்கு இந்தச் செய்தி மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. அனைவரும் பதற்றமாகஇருக்கிறோம். நிலையை எப்படிச் சமாளிப்பது என்றே தெரியவில்லை. கர்நாடகத்தில்ராஜ்குமாருக்கு இருக்கும் செல்வாக்கை வீரப்பன் புரிந்து கொள்ள வேண்டும்.

வெறும் பேரத்திற்காக மட்டும் ராஜ்குமாரை, வீரப்பன் கடத்தியிருக்க மாட்டான் என்றுநம்புகிறோம் என்றார்.

இந்த நிலையில் ரசிகர்கள் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றுராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவும், மகனும் நடிகருமான சிவராஜ்குமாரும்கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெங்களூர் நகரின் பல பகுதிகளுக்குச் சென்ற சிவராஜ்குமார், ரசிகர்கள் அமைதிகாக்குமாறு கூப்பிய கரங்களுடன் வேண்டிக் கொண்டார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+