தமிழகத்தில் இன்று
ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியது எப்படி?
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச்சென்றுவிட்டான். இது குறித்து கர்நாடக மற்றும் தமிழக முதல்வர்கள் தீவிரஆலோசனை நடத்தினர்.
வீரப்பன் கொடுத்தனுப்பியுள்ள கேஸட்டில் எந்த கோரிக்கையையும் அவன்வைக்கவில்லை. மாறாக அடுத்த 8 நாட்களுக்குள் ஒரு தூதரை அனுப்பிவைக்கவேண்டும் என்று கூறியுள்ளான்.
இரு மாநில முதல்வர்களும் தீவிர ஆலோசனைக்குப் பிறகு இரு மாநிலங்களின்சார்பில் ஒருவரை தூதராக அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது. யாரைத்தூதராக அனுப்புவது என்று அடுத்த 2 அல்லது 3 நாட்களில் முடிவு செய்யப்படும்.
இதற்கிடையே ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் எப்படிக் கடத்தினான் என்றுதமிழக கூடுதல் டிஜிபி எஸ். குமாரசாமி கூறியதாவது:
தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் ஈரோடு மாவட்டத்தில் காஜனூர் கிராமம்உள்ளது. இங்கு நடிகர் ராஜ்குமாரின் பூர்வீகமான பண்ணை நிலம் உள்ளது. இங்குஅவர் புது வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வரும்வேளையில் விரைவில் புதுமனை புகுவிழா நடைபெற உள்ளது.
இப்பணிகளைப் பார்வையிட மனைவி பர்வதம்மா, மானேஜர், மருமகன் மற்றும்உறவினர்களுடன் அங்கு வந்திருந்தார் ராஜ்குமார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு டிவி பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது சுமார் 10-12 கூட்டாளிகளுடன் வீட்டுக்குள் நுழைந்தார்சந்தனக் கடத்தல் வீரப்பன். அனைவர் கையிலும் துப்பாக்கி இருந்தது.
பர்வதம்மாவை மட்டும் விட்டுவிட்டு ராஜ்குமார் மற்றும் மானேஜர், மாப்பிள்ளைகோவிந்தராஜ், சம்பந்தி நாகேஷ் உள்பட 4 பேரை வீரப்பன் பிடித்துக் கொண்டான்.பின்னர் தான் கொண்டு வந்த ஆடியோ கேஸட்டை பர்வதம்மாவிடம் கொடுத்தான்வீரப்பன்.
ராஜ்குமாரின் உடல்நலை பற்றி நான் பார்த்துக் கொள்கிறேன். வேளாவேளைக்குமாத்திரை, மருந்து கொடுத்து கவனித்துக் கொள்கிறேன். நான் கொடுத்த இந்தகேஸட்டை கர்நாடக முதல்வரிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறிவிட்டு வீரப்பன்சென்றுவிட்டான்.
ராஜ்குமார் உள்பட 4 பேரைக் கடத்திச் சென்றது குறித்து தமிழக போலீஸாரிடமோ,கர்நாடக போலீஸாரிடமோ தகவல் கொடுக்கக் கூடாது என்று வீரப்பன் மிரட்டி விட்டுச்சென்றுவிட்டான்.
ராஜ்குமாருக்கு சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து ஏற்கெனவே கொலை மிரட்டல்வந்துள்ளது. ஆகவே, வீரப்பன் வசிக்கும் காட்டுப் பகுதிக்கு அருகில் உள்ள பண்ணைவீட்டுக்கு நீங்கள் செல்வதாக இருந்தால் அது பற்றி முன்கூட்டியே தகவல்தெரிவிக்கும்படி கர்நாடக மாநில போலீஸாரும், தமிழக போலீஸாரும் ராஜ்குமாரிடம்கூறியிருந்தனர்.
ஆனால், இப்போது பண்ணை வீட்டுக்கு வந்தபோது அதுபற்றி இரு மாநிலபோலீஸாருக்கோ, சிறப்பு அதிரடிப்படையினருக்கோ அவர் தகவல் தெரிவிக்காமல்வந்துவிட்டார். இதனால், அவரைப் பாதுகாக்க இயலாமல் போய்விட்டது என்றார்குமாரசாமி.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications