தமிழகத்தில் இன்று
அடுத்த கட்ட போருக்குத் தயாராகும் புலிகள்-ராணுவம்
கொழும்பு:
இலங்கை விமானப் படைக்கு இஸ்ரேல் நாட்டின் கிபிர் ரக போர் விமானங்களும், தாக்குதல் ஹெலிகாப்டர்களும்வாங்கப்பட உள்ளன.
இது தவிர உக்ரைன் நாட்டிலிருந்து 4 புதிய மிக்-27 ரக குண்டு வீச்சு விமானங்களை ஏற்கனவே இலங்கைவாங்கியுள்ளது. இந்த விமானங்களை இப்போது புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த பயன்படுத்தியும் வருகிறது.
இப்போது 9 எம்.ஐ.-24 ரக ஹெலிகாப்டர்களை இலங்கை பயன்படுத்தி வருகிறது. மேலும் 2ஹெலிகாப்டர்களையும் வாங்கவுள்ளது. புதிய விமானங்கள், ஹெலகாப்டர்கள் வந்த பின்னர் புலிகள் மீது பெரும்தாக்குதல் நடத்த ராணுவம் திட்டமிட்டுளளது.
கடந்த மே மாத்தில் கிபிர் ரக விமானங்கள் வாங்க இஸ்ரேலுடன் பேச்சு நடத்தியது இலங்கை. இப்போது இந்தவிமானங்கள் இலங்கைக்கு வந்து இறங்கவுள்ளன.
இலங்கை கடற்படையும் தனக்கு தனி கடல் கண்காணிப்பு விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காகபைலட்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
கடந்த ஜூன் 26ம் தேதி கடல் புலிகள் கடற்படை சரக்குக் கப்பல் மீது பெரும் தாக்குதல் நடத்தினர். அதன் பின்னர்போர் முனையில் பெரிய அளவில் மோதல் எதிலும் புலிகளோ, இலங்கை ராணுவமோ ஈடுபடவில்லை.
புலிகளும் ஆயத்தம்:
புலிகளும் தங்கள் படையில் ஆயிரக்கணக்கானவர்களை சேர்த்து வருகின்றனர். இந்த புதிய படைக்கு தீவிரபயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் ஆகஸ்ட் மாதத்திற்குள் முழு அளவிலான தாக்குதலுக்குத் தயார்ஆகிவிடுவர் எனத் தெரிகிறது. இதன் பின்னர் ராணுவத்தின் மீது புலிகள் பெரும் தாக்குதல் நடத்துவர் எனத்தெரிகிறது.
தேர்தல் வேறு நடக்க இருப்பதால் ராணுவப் படைகள் தேர்தல் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட வேண்டியிருக்கும்.யாழ்பாணத்தில் நிலை கொண்டுள்ள ராணுவத்தினர் நாட்டின் பிற பகுதிகளுக்கு தேர்தல் பாதுகாப்புப்பணிகளுக்காக அனுப்பப்பட்டுவிட்டால், மீதியுள்ள குறைந்த அளவிலான படைகளை புலிகள் சின்னாபின்னமாக்கிவிடுவர் என பாதுகாப்பு நிபுணர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications