தமிழகத்தில் இன்று
தமிழக, கர்நாடக அரசுகளுக்கு வீரப்பன் 8 நாள் கெடு
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்கக் கோரி சந்தனக் கடத்தல் வீரப்பனை சந்திக்க உடனடியாக ஒரு தூதரைகாட்டுக்குள் அனுப்ப தமிழக, கர்நாடக அரசுகள் முடிவு செய்துள்ளன.
யாரை அனுப்புவது என இன்னும் முடிவு செய்யவில்லை. ராஜ்குமார் கடத்தப்பட்டதையடுத்து திங்கள்கிழமைசென்னைக்கு விரைந்த கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்தார்.
இருவரும் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக ஒரு தூதரைகாட்டுக்குள் அனுப்பி வீரப்பனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த பிரச்சனைக்கு 8 நாட்களுக்குள் முடிவு காண வேண்டும் என இரு மாநில அரசுகளுக்கும் வீரப்பன் கெடுவிதித்துள்ளதாகத் தெரிகிறது. வீரப்பனின் கோரிக்கைகள் குறித்து இதுவரை எந்த விவரமும் தெரியவில்லை.
அதிரடிப்படை, போலீசை உபயோகித்து வீரப்பனை பிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்படுமா என்று இருமுதல்வர்களிடமும் நிருபர்கள் கேட்டபோது, இப்போது பிரச்சனையை மேலும் சிக்கலாக்க விரும்பவில்லை.ராஜ்குமாரை மீட்பது தான் எங்களது முதல் குறிக்கோள் என்றனர்.












Click it and Unblock the Notifications