400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
அதிரடிப்படையால் வீரப்பனைப் பிடிக்க முடியாது
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்து பலருக்கும், பலவிதமான கருத்து இருந்தாலும்,அவனைத் தேடும் பணியில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளைப் பொறுத்தவரை,திட்டமிடுதலில் தலை சிறந்தவன் வீரப்பன்.
வீரப்பனின் திட்டமிடுதலைப் பாராட்டும் காவல்துறை அதிகாரிகள், அவனைப்பிடிப்பதற்கான வழிமுறைகள் குறித்து எந்தவித யுத்தியும் இல்லாமல் கையைப்பிசைந்து கொண்டுள்ளனர்.
1995-ம் ஆண்டு திம்பம், பாலார் பகுதிகளில் நடந்த வீரப்பன் தேடுதல் வேட்டைக்குத்தலைமை தாங்கியவர் பெங்களூர் நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.சி.பர்மன்.தமிழக, கர்நாடக கூட்டு அதிரடிப்படை மூலம் வீரப்பனைப் பிடிக்க முடியாது என்கிறார்பர்மன்.
பர்மன் கூறுகையில், வீரப்பன் மறைவிடம் குறித்துத் தங்களுக்குக் கிடைக்கும்தகவல்களை தமிழக அதிரடிப் படை வீரர்களிடம் கர்நாடக வீரர்கள் தெரிவிப்பர்.அதைப் பெற்றுக் கொண்டு, தமிழக வீரர்கள்
செயல்படுவதற்குள் வீரப்பன் தப்பித்திருப்பான்.
வீரப்பனைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு என்பதே கிடையாது.கூட்டு அதிரடிப்படை வீரர்கள் அவரவர் மாநில உயர் அதிகாரிகளின்உத்தரவின்பேரில்தான் செயல்படுகின்றனர்.
பலமுறை, வீரப்பன் இருப்பிடம் வரை சென்றும், அவன் தப்பித்திருக்கிறான். சரியானதகவல் பரிமாற்றம் இல்லாததே இதற்குக் காரணம் என்றார் பர்மன்.
கர்நாடக அதிரடிப் படையில் இருந்த இன்னொரு அதிகாரியான கோபால் ஒசூர்கூறுகையில், வீரப்பன் என்ன செய்வான் என்பதைக் கணிப்பது மிகவும் கடினம். அவன்இருக்கும் காடு முழுவதும் வீரப்பனுக்கு அத்துப்படி. அந்தக் காட்டின் ராஜா அவன்.அவனுக்கு இணையாக யாருமே வர முடியாது. அப்படிச் செயல்படுகிறான் வீரப்பன்என்கிறார்.
1993-ம் ஆண்டு வீரப்பின் நடத்திய தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்ஒசூர். அப்போது அதிரடிப்படைத் தலைவராக இருந்தார் ஒசூர். 93-ம் ஆண்டு மே24-ம் தேதி மாதேஸ்வரா மலையிலிருந்து, மைசூருக்கு வந்து கொண்டிருந்தவேளையில், ஒரு இடத்தில் வீரப்பன் கும்பல் ஒசூரின் கரை வழிமறித்தது.துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் ஒசூரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இருப்பினும்கையில் வைத்திருந்த சூட்கேஸால் பாய்ந்து வந்த குண்டுகளைத் தடுத்து உயிர்தப்பினார் ஒசூர்.
ஒசூர் தொடர்ந்து கூறுகையில், காட்டுக்குள் அவன் ஒரு பூனை மாதிரி உலாவுகிறான்.எங்கே இருக்கிறான், எப்படிப் போகிறான் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது.அவனும், கூட்டாளிகளும் அடிக்கடி விலங்குகள் போல சப்தம் எழுப்பிக்கொண்டிருப்பார்கள். இதன் மூலம் தகவல்களையும் பரிமாறிக் கொள்வார்கள்.
காட்டில் எங்கு நீர்ச் சுனை உள்ளது என்பது வீரப்பனுக்கு அத்துப்படி. எங்கேயானைகள், புலிகள், நரிகள், காட்டுப் பூனைகள், பாம்புகள் இருக்கும் என்பதும்அவனுக்குத் தெரியும்.
வீரப்பனுக்குத் தகவல் தருவதற்காக உள்ள நெட்வொர்க் கற்பனைக்கும்அப்பாற்பட்டது. மிகப் பெரிய நெட்வொர்க் அது. மழைக் காலங்களில் வீரப்பனைப்பிடிக்க காட்டுக்குள் செல்லவே முடியாது. அட்டைகள் தோலை உரித்து விடும். ஆனால்வீரப்பனுக்கு அதுபற்றியெல்லாம் கவலை கிடையாது என்றார் ஒசூர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications