காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் உட்பட 5பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

நியாயமாக இருந்தால் வீரப்பன் கோரிக்கைகளை ஏற்போம்: கருணாநிதி

சென்னை:

வீரப்பனின் கோரிக்கைள் நியாயமாக இருந்தால் அவற்றை ஏற்க தமிழக அரசு ஏற்கத் தயங்காதுஎன்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதியை நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ் குமார் மற்றும் மருமகன்ராம்குமார் ஆகிய இருவரும் சென்னையில் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில்புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.

பின்னர் வீட்டிற்கு வெளியே காத்திருந்த செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், வீரப்பனின்கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தால் அவற்றை ஏற்பதில் எங்களுக்குத் தயக்கம்கிடையாது.

நக்கீரன் கோபால் வந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துத் தெரிய வரும். வீரப்பனைகோபால் பார்த்த பிறகுதான் அவனது கோரிக்கைள் என்ன என்பது குறித்துத் தெரிய வரும்.

வீரப்பனின் கோரிக்கைகள் குறித்து கோபால் இங்கே வந்தும் கூறலாம். அல்லது அங்கிருந்தபடியேஎங்களைத் தொடர்பு கொள்ளலாம். வீரப்பனின் கோரிக்கை எதையும் ஏற்பதாக கோபாலிடம் அரசுஏதும் உறுதியளிக்கவில்லை. என்ன கோரிக்கை என்பதே தெரியாமல் எப்படி உறுதியளிக்க முடியும்?

ராஜ்குமாரின் மகனிடமும், மருமகனிடமும், கவலைப்படாதீர்கள். எல்லாம் நல்லபடியாக முடியும் என்றுஆறுதல் கூறினேன். ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவிடமும் போனில் பேசினேன். நல்லதேநடக்கும் என்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.

நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் சித்திரவதை செய்ய மாட்டான் என்று நம்புகிறேன். இதற்கு முன்பு அவன்பிடித்துச் சென்றிருந்த பினைக் கைதிகளை துன்புறுத்தியது இல்லை. அதுபோலவே இப்போதும் நடப்பான்என்ற நம்பிக்கை உள்ளது.

ராஜ்குமாரின் நலம் குறித்து வீரப்பன் அக்கறை காட்டுவான் என்று நினைக்கிறேன். அவரது வயதுஉடல் நலத்தை வீரப்பன் கருத்தில் கொள்வான் என்று நினைக்கிறேன்.

இப்போது வீரப்பனிடம் சென்றுள்ள கோபாலின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை. அதையெல்லாம்அவர் எளிதில் கடந்து விடுவார்.

ராஜ்குமார் விவகாரம் மட்டுமல்லாது, கர்நாடகம் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினையானாலும்அங்கு வாழும் தமிழர்களின் நலனையும் கருத்தில் கொண்டே நான் பிரச்சினைகளை அணுகி வருகிறேன்.

இரு மாநில மக்களும் சகோதர உணர்வுடன் வாழவே நான் விரும்புகிறேன். ராஜ்குமார் கடத்தப்பட்டபிறகு கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக கலவரம் நடப்பது குறித்து அறிந்தவுடன், உடனடியாககர்நாடக முதல்வருடன் பேசினேன். தமிழர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்உறுதியளித்துள்ளார் என்றார்.

சென்னையில் கர்நாடக ஐ.ஜி.

முன்னதாக ராஜ்குமார் விவகாரம் தொடர்பாக தமிழக டி.ஜி.பி. சர்மாவுடன் பேசுவதற்காக கர்நாடகஐ.ஜி. கே.ஆர்.ஸ்ரீனிவாஸ், சென்னை வந்து சேர்ந்தார். தமிழக போலீஸாருடன் இணைந்துசெயல்படுவதற்காக அவர் சென்னை வந்துள்ளார்.

முன்னதாக சென்னை வந்த சிவராஜ் குமாரும், ராம் குமாரும், ராஜ்குமாரை மீட்பது தொடர்பானநடவடிக்கைள் குறித்து குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கேட்டறிந்தனர். பிறகு செய்தியாளர்களிடம்அவர்கள் பேசுகையில், எங்களது தந்தையை மீட்பது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும்எடுக்கப்பட்டு வருகின்றன.

ரஜினியுடன் சந்திப்பு

வீரப்பனிடம் தூதராக சென்றுள்ள நக்கீரன் கோபால், வீரப்பனின் நிபந்தனைகளுடன் வந்த பிறகேஅடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும். விரைவில் அதுகுறித்துத் தெரிய வரும் என்றனர்.

முன்னதாக, நடிகர் ரஜினி காந்த்தையும் இருவரும் சந்தித்துப் பேசினர். வீரப்பனிடம் தூது செல்லத் தான்தயார் என்று ரஜினி காந்த் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+