இருப்பது வேறு: வசிப்பது வேறு
சனிப் பெயர்ச்சி பலன்கள்
ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சனி இடம் பெயர்வதுதான் சனிப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது.
ஜாதகத்தில் உள்ள 9 கட்டங்களுக்குள் ஒவ்வொரு கிரகங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்கின்றன.
ஆனால், சனி மற்றும் குரு கிரகங்கள் இடம் பெயர்வதுதான் முக்கியநிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. அதிலும் சனிப் பெயர்ச்சி என்பது ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் மிகமிக முக்கிய நிகழ்ச்சியாகும்.
ஆகஸ்ட் 3-ம் தேதி, வியாழக்கிழமை சனிப் பெயர்ச்சி நடைபெற உள்ளது. மேஷராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாலை 4.20 மணிக்கு சனி இடம்பெயர்கிறார்.
தனக்கு நட்பு ராசியான ரிஷப ராசியில் இரண்டரை ஆண்டுகள் அவர் இருப்பார்.
சனி மாதிரி கொடுப்பவரும் கிடையாது. கெடுப்பவரும் கிடையாது என்பதால் சனிப்பெயர்ச்சி ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முக்கிய சம்பவமாகும்.
சனி கொடுக்கும் பலனை எந்த கிரகத்தாலும் அழிக்கமுடியாது. சனி கொடுப்பதை எந்த கிரகமும் கெடுக்க முடியாது. ஏனெனில் தர்ம, நியாயங்களைஅலசிப் பார்த்து அவரவர்கள் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு நீதி வழங்குவதில் சனி வல்லவர்.
மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிவுக்கு வருகிறது. மிதுனதுக்கு ஏழரை சனிஆரம்பம். மேஷத்துக்கு இரண்டரை ஆண்டு சனியும், ரிஷபராசிக்காரர்களுக்கு 5 ஆண்டு சனியும் பாக்கியுள்ளது.
ஆஞ்சநேயரை வழிபட்டால் நல்லது. திருநள்ளாருக்கு சென்று பூஜித்து வருவது மிகவும் நல்லது. காக்கைக்கு எள் கலந்த சாதம் படைப்பதும் நல்லது.சனீஸ்வரனுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் நல்லெண்ண்ெய்யில் விளக்கேற்றினால் சனியின் பாதிப்பிலிருந்து சற்று விடுபடலாம்.
இனி சனிப் பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்கும் உள்ள பலன்கள்:
மேஷம்:
ராசிக்கு இரண்டாம் இடத்தில் சனி உள்ளார். இது ஏழரை ஆண்டு சனியில் கடைசி இரண்டரை ஆண்டாகும். சனி பத்து, பதினொன்று ஆதிபத்யம் பெற்றவர்.கர்மவினையையும், ஊழ்வினையையும், மூத்த சகோதர பாவத்தையும் தொழில் மூலம் வரும் லாபத்தையும் குறிப்பவர்.
இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் சனியினால் உங்களுக்குப் பெரிதும் தீமை இல்லை.நன்மைகள் சற்று கூடுதலாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும்.சிலர் புதுமனை புகுவர்.
வேலை இல்லாதவர்களுக்கு வேலை நிச்சயம். வெளிநாடு முயற்சி கைகூடும்.மற்றபடி எதிலும் நிதானம் தேவை. சில நேரங்களில் கிரகம் கண்ணைமறைக்கும். இறை வழிபாடு அவசியம்.
ரிஷபம்:
ஏழரை ஆண்டு சனியில் ஜென்ம சனியின் காலகட்டம் இது. எதிலும் அதிகம் கவனம் தேவை. எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு இரு முறை நன்றாகயோசித்து முடிவுஎடுக்கவேண்டும். ஏனென்றால் ஜென்ம ராசியில் குரு கிரகம் உள்ளது.
கிரகங்களின் அழுத்தம் அதிகமாக உள்ளதால் தியானம், பக்தி மார்க்கம்போன்றவற்றில் கவனம் செலுத்துவது நல்லது. மற்றபடி இந்த ராசிஅன்பர்களுக்கு திருமணம் கை கூடி வரும்.
உறவில் திருமணம் வேண்டாம். தொழில் உத்தியோகம் மற்ற முயற்சிகள்அனைத்தும் ஒரு வருட காலத்துக்கு மந்தமாக இருக்கும்.
மிதுனம்:
ஏழரை ஆண்டு சனியின் ஆரம்பம். ஜென்மத்தில் ராகு. பன்னிரெண்டில் குரு. ஆக மொத்தத்தில் குழப்பம், தடுமாற்றம். நிலையற்றதன்மை ஏற்படக்கூடியகாலகட்டம்.
பொறுமை மிகமிக அவசியம். அளந்து, அடியெடுத்து வைக்கவும். ஜனன கால ஜாதகப்படி நல்ல தசாபுத்தி நடப்பவர்களுக்கு பெரிதும் பாதிப்பு இருக்காது.இருந்தாலும்உஷாராக இருக்கவேண்டும். சனிக்கிழமைதோறும் ப்ரீதி செய்யவும்.
கடகம்:
மிகவும் விசேஷமான நன்மையான காலகட்டம் ஆரம்பம். தொட்டது எல்லாம்துலங்கும். சிலர் லட்சாதிபதிகள், கோடீஸ்வரர்கள் ஆவர்.
எல்லாம் சுகமே, சந்தோஷமாக இருங்கள். வாழ்க வளடன்.
சிம்மம்:
எப்பவும் எதற்கும் கவலைப்படாதவர்கள் நீங்கள். சிலருக்கு உயர் பதவி வரும். நன்மைகள் சற்று தாமதமாக வரும். எதிரிகள் மறைவார்கள்.
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகம் பாதிப்பு இல்லை. குருவுக்கு மட்டும் வியாழக்கிழமைகளில் ப்ரீதிசெய்யுங்கள்.
கன்னி:
எல்லாம் விதிப்படி இறைவன் செயல் என்று இருப்பவர்கள் நீங்கள். குரு பலம் மிகுதியாக உள்ளது. சனி 9-ம் இடத்துக்கு வருவது நன்மையும் தீமையும்கலந்தது.
பெரிய பாதிப்பு கிடையாது. செப்டம்பருக்குப் பிறகு புதிய முயற்சிகளை
மேற்கொள்ளவும். திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும்.
உத்தியோகம், தொழில், வருமானம் எல்லாம் 75 சதவீதம் திருப்தியாக
இருக்கும்.
துலாம்:
அஷ்டமத்தில் சனி, குரு இருவரும் உள்ளனர். சனி யோககாரகன். மேலும்
அஷ்டமாதிபத்திய தோஷம் கிடையாது. 9-ல் ராகு இருப்பது செளகரியமே.
சனி, குருவின் பாதிப்பு 75 சதவீதம் குறைந்துவிடும். இருந்தாலும் நிதானம் தேவை. பயணத்தின்போது கூடுதல் கவனம் தேவை.
அமைதியின்மை, வெறுப்பு, தேவையற்ற பயம் ஏற்படும். தியானம், யோகா, இறைவழி ஆகியவற்றின் முலம் அனைத்தையும் குறைக்கலாம்.
ஒவ்வொரு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் குரு, சனிக்கு ப்ரீதி செய்யவும்.
விருச்சிகம்:
சனி 7-ல் இருப்பது திக் பலமே. மேலும் விருச்சிக ராசிக்கு பெரிய பாதிப்பைஏற்படுத்தமாட்டார். பலருக்குத் திருமணம் கைகூடும்.
செய் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். உத்தியோக உயர்வு உண்டு. நீண்டநாள் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.மற்றபடி எல்லாம் சுகமே.
தனுசு:
சனி 2-க்கும், 3-க்கும் உடையவர். திடீர் தனப்பிராப்தி ஏற்படும். நீண்ட நாள் வழக்குகள் சாதகமாக அமையும்.
மொத்தத்தில் சனிப் பெயர்ச்சி யோக காலமே. ஆனால், கேதுவின் நிலை
சரியில்லாததால் திங்கள்கிழமை மற்றும் சதுர்த்தி நாட்களில் விநாயகரை
வழிபடுவது நல்லது.
மகரம்:
உங்களுக்கு ராசிநாதன் சனி. அவர் 5-ம் இடத்தில் யோகாதிபத்தியத்தில்
இருக்கிறார்.
இதனால், பூர்வபுண்ணிய அபிவிருத்தி, வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு உத்தியோக பிராப்தி, சகலவிதமான நன்மைகள் அதிகம் உள்ள காலகட்டம்.நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கும்பம்:
ராசிநாதன் சனி. 4-ம் இடத்துக்கு வருகிறார். அர்தாஷ்டம் சனி என்று
சொல்லுவார்கள். இந்த நாளில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் தேவை. குழந்தைகள் கல்வியில் கவனம் தேவை.
சுகம் குறையும், நல்ல உணவு கிடைக்காது. இந்த மாதிரியான சிறுசிறு கஷ்டங்கள் உண்டு. சனி ப்ரீதியினாலும் இறைவழிபாட்டின் மூலமும் கஷ்டங்களைநிவர்த்தி செய்யலாம்.
மீனம்:
சனி 3-ம் இடத்துக்கு வருகிறார். இதனால் அபாரமான வளர்ச்சி உண்டு.
மேலும் நீண்ட நாட்களாகக் கண்டு வரும் கனவுகள் பலிக்கும்.
சகோதர, சகோதரிகளின் வளர்ச்சி சீர்பெறும். மொத்தத்தில் எல்லா விதத்திலும்செளகர்யமான நேரமிது. எல்லாம் சுகமே.
பொதுப் பலன்:
தேசத்துக்குச் சோதனையான காலகட்டம். ஆட்சி மாற்றம், விலைவாசி உயர்வு,இயற்கைச் சீற்றங்கள் போன்றவை அதிகமாக இருக்கும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications