"மருத்துவ வளர்ச்சி ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும்
கோவை:
மருத்துவத் துறையின் நவீன வளர்ச்சி ஏழை, எளிய மக்களுக்கும் உதவும் வகையில், டாக்டர்கள் பணியாற்ற வேண்டும் என எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக் கழக துணை வேந்தர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவையில் ஓட்டல் ரெசிடென்சியில் முதுகுத் தண்டு அறுவை சிகிச்சை குறித்த கருத்தரங்கு துவங்கியது. இதில் எம்.ஜி.ஆர் மருத்துவமனை துணை வேந்தர்டாக்டர் அனந்தகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:
புதிய மற்றும் நவீன சிகிச்சைகள் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கும் ஏழை, எளிய மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் அரசு திட்டங்களைமேற்கொள்ள வேண்டும். இந்த மக்கள் பயன் பெறும் வகையில், டாக்டர்கள் உதவ வேண்டும்.
அறுவை சிகிச்சைக்கான கட்டணத்தில் ஏழை மக்களுக்கு சலுகை அளிக்க டாக்டர்கள் முன் வர வேண்டும். நவீன சிகிச்சை குறித்து நிபுணத்துவம் பெற்றடாக்டர்கள் மற்ற டாக்டர்களுடன் கலந்துரையாட வேண்டும்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள இந்திய டாக்டர்களும் அதிக கலந்துரையாடல்களையும் கருத்தரங்குகளையும் நடத்தி, தொழில்நுட்பங்களைப்பரிமாறிக் கொள்ள வேண்டும்.
இந்த பரிமாற்றத்தின் மூலம் மருத்துவ அறிவை டாக்டர்கள் மற்றவர்களுக்கு கொடுப்பதுடன், பகிர்ந்து கொள்ளவும் முடியும் என்றார்.
இந்த கருத்தரங்கில் பாரதிதாசன் மேலாண்மைக் கல்லூரியின் பேராசிரியர் ஜெயசங்கரன் பேசினார். கங்கா மருத்துவமனையின் சேர்மன் டாக்டர் சண்முகசுந்தரம் பேசினார்.












Click it and Unblock the Notifications