இன்டர்நெட் உபயோகத்தில் தமிழகத்திற்கு 3-வது இடம்
சென்னை:
இன்டர்நெட் வசதிகளைப் பயன்படுத்துவதில் தமிழ்நாடு வேகமாக முன்னேறிவருவதாக மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன்தெரிவித்தார்.
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம்அளித்த பதிலில் இதை அவர் தெரிவித்தார்.
வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத்தில் இன்டர்நெட் முக்கிய இடம்வகிக்கிறது. இந்தியாவில் இந்த இணைய வசதியைப் பெறுவதில் மாநிலங்களும், பெருநகரங்களும் வேகமாக முன்னேறி வருகின்றன.
இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் 14 லட்சத்துக்கும் அதிகமான இன்டர்நெட்இணைப்புகள் உள்ளன. மகாராஷ்டிராவில் 4.52 லட்சம், டெல்லியில் 2.26 லட்சம்,தமிழகத்தில் 2.14 லட்சம் இணைப்புகள் உள்ளன.
பெருநகரங்கள் வரிசையில் மும்பையில் 2.81 லட்சம், டெல்லியில் 2.26 லட்சம்,சென்னையில் 1.12 லட்சம் இன்டர்நெட் இணைப்புகள் உள்ளன என்றார் பிரமோத்மகாஜன்.












Click it and Unblock the Notifications