விவசாயிகளின் ரூ. 151 கோடி பாக்கியைத் தர ஆலைகள் ஒப்புதல்
சென்னை:
கரும்பு விவசாயிகளுக்குத் தரவேண்டிய ரூ. 151 கோடி நிலுவைத் தொகையைத் தரசர்க்கரை ஆலை உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையில் சென்னையில்சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்த ஒப்புதலை தனியார் சர்க்கரை ஆலைஉரிமையாளர்கள் அளித்தனர்.
2000-01-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது, கரும்புவிவசாயிகளுக்குக் கொடுக்கவேண்டிய நிலுவைத் தொகை தொடர்பாக தனியார்கரும்பு ஆலை உரிமையாளர்களை அழைத்து பேசப்படும் என்று முதல்வர் கருணாநிதிஅறிவித்தார்.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் பேசும் போதும்,நிலுவைத் தொகையை கரும்பு ஆலை உரிமையாளர்கள் உடனே தர முன்வரவேண்டும் என்றும், அவர்களை அழைத்துப் பேச அரசு தயாராக இருப்பதாகவும்முதல்வர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்புக்களுக்கிணங்க, தனியார் கரும்பு ஆலை உரிமையாளர்கள் கூட்டத்தைஅமைச்சர் வீரபாண்டிஆறுமுகம் கூட்டினார். இக் கூட்டத்தில் தமிழகத்தில் உள்ளஅனைத்து தனியார் கரும்பு ஆலை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலைக்கான நிலுவைத் தொகையையும்,தனியார் ஆலைகளும் கரும்பு விவசாயிகளும் சேர்ந்து ஒப்புக்கொண்ட விலைக்கானநிலுவைத் தொகையையும் சேர்த்து 31.7.2000 வரை தரவேண்டிய நிலுவைத்தொகையான ரூ. 151 கோடியைத் தர ஆலை உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டனர்.
இந்த நிலுவைத் தொகையை ஆகஸ்ட் 15, ஆகஸ்ட் 30-க்குள் கொடுக்க சில ஆலைஉரிமையாளர்களும், செப்டம்பர் இறுதிக்குள் கொடுக்க சில ஆலைஉரிமையாளர்களும் ஒப்புக் கொண்டன.












Click it and Unblock the Notifications