"தண்டனையிலிருந்து அ.தி.மு.க.வினர் தப்பமுடியாது
சென்னை:
ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான அ.தி.மு.க. வினர் தண்டனையிலிருந்து தப்பமுடியாது என்று தமிழ்நாடு ராஜீவ் காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திதெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
நீதிக்கு முன் குற்றவாளிகள் யாரும் தப்பமுடியாது என்பதை முன்னாள் அமைச்சர்செங்கோட்டையனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டதிலிருந்து தெளிவாகிறது.
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல் தொடர்பாக தி.மு.க. பதவியேற்றதும் பலவழக்குகள் போடப்பட்டன. இந்த வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்களும்அமைக்கப்பட்டன.
தி.மு.க அரசு போட்ட வழக்குகள் அ.தி.மு.க.வை கேவலப்படுத்தவும், பழிவாங்கும்நோக்கத்திலும் போடப்பட்டதாக அ.தி.மு.க.வினர் அவதூறு பிரசாரம்மேற்கொண்டனர்.
இந்த வழக்குகளின் விசாரணையைத் தாமதப்படுத்த பல்வேறு குறுக்கு வழிகளைஅ.தி.மு.க.வினர் கையாண்டனர். ஆனால், வழக்குகள் புனையப்படவில்லைஎன்பதற்கு ஆதாரமாக அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா உள்பட பலமுன்னாள் அமைச்சர்கள் பலருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வழக்குகளின் தன்மையை ஆராயும்போது தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்மேல்முறையீடு செய்தாலும் எந்தப் பலனும் ஏற்படாது என்றே தெரிகிறது.
இனி தீர்ப்பு வழங்கப்படவுள்ள வழக்குகளிலும் தண்டனையிலிருந்து அ.தி.மு.க.வினர்யாரும் தப்ப முடியாது என்றார் வாழப்பாடி ராமமூர்த்தி.












Click it and Unblock the Notifications