கர்ப்பிணியை தரையில் அடித்துக் கொன்ற சூனியக்காரர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் மூட நம்பிக்கைப் பேய் பிரதமர் வாஜ்பாயின் தொகுதியையும் விட்டு வைக்கவில்லை.காத்ரா பகாஸ் என்ற கிராமத்தில், வெயிலில் மயங்கி விழுந்த கர்ப்பிணிப் பெண்ணை பில்லி சூனியத்தை விரட்டும் கிராம வைத்தியர் தரையில் அடித்துக்கொன்றார்.

காத்ரா பகாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் மம்தா தேவி (வயது 25). கர்ப்பிணியான இவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது வெயில் கொடுமைதாங்காமல் மயக்கம் போட்டு விழுந்தார். உடனடியாக இவரது கணவர் விஜயகுமார் காஷ்யாப் இவரை பக்கத்திலுள்ள கிராம வைத்தியரிடம்அழைத்துச் சென்றார். அந்த வைத்தியர் பில்லி, சூனியம் போன்றவற்றை விரட்டுபவர்.

ஓஜா என்று அழைக்கப்படும் அந்த வைத்தியர் அப்பெண்ணுக்கு சாம்பலைத் தின்பதற்காகக் கொடுத்து, அனுப்பி விட்டார். வீடு திரும்பிய மம்தாவின்உடல்நிலை மேலும் மோசமானது. இதனால் பதட்டமடைந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் மீண்டும் அதே கிராம வைத்தியரிடம் கொண்டுசென்றனர்.

அவரை மீண்டும் பரிசோதித்த ஓஜா, மம்தாவை, சாத்தான் ஆட்கொண்டுள்ளது. அதிலிருந்து விடுபட துடைப்பத்தால் அடிக்க வேண்டும் என்று கூறி கர்ப்பிணிப்பெண்ணான மம்தாவை துடைப்பத்தால் அடித்துள்ளார். பின்னர் அவரை தலையை பிடித்துக் கொண்டு, துணி துவைப்பது போல் தரையில் அடித்தார். அப்போதுஅவரது கணவர் மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர்.

வலி தாங்காமல் மம்தா மயங்கிய நிலையில் இருந்தார். வீட்டுக்கு கொண்டு சென்று விட்டால் அவர் சரியாகி விடுவார் என்று ஓஜா கூறினார். அதன்படிமம்தா வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டார். அப்போதே அவர் இறந்துவிட்டார். ஆனால் அவரது குடும்பத்தாரோ அவர் மயக்க நிலையிலிருந்துஎழுந்து விடுவார் என்று கூறி இரண்டு நாட்கள் மம்தாவின் சடலத்தை வைத்திருந்தனர். அதற்குப்பின்தான் அவர் இறந்து விட்டார் என்றே மம்தாவின்குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த விஷயம் கிராமம் முழுவதும் பரவியது. அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இச்சம்பவம் குறித்து கோசேகஞ்ச் போலீசில் புகார் கொடுத்தார்.போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மம்தாவின் கணவர் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தலைமறைவாகிவிட்ட அந்த சூனியக்காரரைத் தேடி வருகின்றனர்.

உத்தரப்பிரதேச கிராமங்களில் பில்லி, சூனியம் போன்ற மூடநம்பிக்கைள் அதிகமாக உள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+