சாதகமாக பதிலளித்துள்ளோம் ... கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரப்பனின் கோரிக்கைளுக்கு பதில்களை தெரிவித்துள்ளோம். அந்த பதில்கள் வீரப்பனின் கோரிக்கைகளுக்குச் சாதகமானவையாக இருக்கும் என்றுமுதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

சந்தனக் கடத்தல் வீரப்பனின் 10 நிபந்தனைகள் குறித்து கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், தமிழக முதல்வர் கருணாநிதியும் சென்னையில்ஞாயிற்றுக்கிழமை இரண்டரை மணிநேரம் ஆலோசனை நடத்தினார்கள்.

கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரையும், அவரது உறவினர்களையும் பத்திரமாக மீட்பதற்காக நக்கீரன் கோபாலை அரசுத் தூதுவராக இருமாநிலங்களும்வீரப்பன் மறைந்திருக்கும் சத்தியமங்கலம் காட்டுப்பகுதிக்குள் அனுப்பி வைத்தது.

தற்போது வீரப்பனின் நிபந்தனைகள் அடங்கிய கேசட்டை கோபால் தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அது கர்நாடக முதல்வருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கைகள குறித்து இருமாநில முதல்வர்களும் ஆலோசனை நடத்தியபின் முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

வீரப்பனுக்குரிய கோரிக்கைகளுக்கு நாங்கள் 10 பதில்களை தெரிவித்துள்ளோம். வீரப்பன் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அந்த பதில்கள் இருக்கும்.இந்த பதில்கள் வீரப்பனுக்குரிய கோரிக்கைகளுக்குச் சாதகமானவையாக இருக்கும் என நம்புகிறோம்.

நக்கீரன் கோபால் இருமாநிலங்களின் தூதுவராக காட்டுக்குச் சென்றுள்ளார். ராஜ்குமாரை விடுவித்து விட்டேன் என்ற நல்ல பதிலை அவர் அனுப்புவார்என்று எதிர்பார்க்கிறோம்.

கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று வீரப்பன் எச்சரித்துள்ளான். முதலில் நடிகர் ராஜ்குமார் எந்த ஆபத்துமின்றிவிடுதலையடைய வேண்டும் என்பதுதான் இரு மாநில அரசுகளின் தற்போதைய குறிக்கோள்.

இப்போதைய தகவல்கள்படி வீரப்பன் பிடியிலுள்ள நடிகர் ராஜ்குமார் நலமாக இருக்கிறார். அவரது உடல்நிலையில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றார்கருணாநிதி.

இரு மாநிலங்களுக்கிடையே நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடக காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, மத்திய அமைச்சர் அனந்தகுமார், தலைமைச் செயலாளர் டி.கே.பட்டாச்சாரியா, டி.ஜி.பி.தினகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் கருணாநிதி உள்பட மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் ஏ.பி.முத்துசாமி,டி.ஜி.பி.எப்.சி.சர்மா, கூடுதல் டி.ஜி.பி. குமாரசாமி, போலீஸ் கமிஷனர் பி.காளிமுத்து தமிழகம் சார்பில் கலந்து கொண்டனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+