கோவை ரூட்ஸ் ஹாரனுக்கு அமெரிக்க ராணுவம் அங்கீகாரம்
கோவை:
கோவையிலுள்ள ரூட்ஸ் ஹரான் கம்பெனிக்கு அமெரிக்க ராணுவம் அங்கீகாரம் அளித்துள்ளது என கோவைரூட்ஸ் ஹாரன் நிறுவனத் தலைவர் ராமசாமி கூறினார்.
கோவையில் நடந்து வரும் ஆட்டோ போகஸ் 2000 கண்காட்சியின்போது ரூட்ஸ் நிறுவனத் தலைவர் ராமசாமிகூறியதாவது:
ரூட்ஸ் ஹாரன் புகழ் பெற்ற நிறுவனங்களான டெல்கோ, மஹிந்திரா, டொயாட்டோ போன்ற நிறுவனங்கள்பயன்படுத்தி வருகின்றன. அமெரிக்க ராணுவத்திற்கென ரூட்ஸ் நிறுவனம் வடிவமைத்த ஹாரனுக்கு அங்கீகாரம்கிடைத்துள்ளது.
எலெக்ட்ரானிக் முறையில் தயார் செய்யப்பட்ட ஹெக்ஸடோன் என்ற ஹரானுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த ஹாரனைத் தயார் செய்ய 35 லட்ச ரூபாய் செலவிடப்பட்டது. இந்த ஹாரன் இந்தியாவிலேயே முதல்முறையாக ரூட்ஸ் நிறுவனம் தான் வடிவமைத்துள்ளது.
இந்த நிறுவனம் தயாரிக்கும் ஹாரன்களில் 20 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஜப்பான், ஹாலந்து,தெற்காசிய நாடுகள், மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றிற்கு இந்த ஹாரன்கள்ஏற்றுமதியாகின்றன.
கடந்த 1999-2000ம் ஆண்டுகளில் 46 கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் நடந்துள்ளது. இந்த ஆண்டில் 24.6 கோடிரூபாய்க்கு எலக்ட்ரிக் ஹாரன் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
64 லட்ச ரூபாய் நிகர லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் 18 லட்சம் ஹாரன்கள் உற்பத்திசெய்யப்பட்டுள்ளது என்றார் ராமசாமி.












Click it and Unblock the Notifications