சந்தோஷ் சிவன் படத்துக்கு நியுசிலாந்தில் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

மெல்போர்ன்:

திரைப்பட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தி டெரரிஸ்ட் திரைப்படம் நியுசிலாந்து திரைப்பட விழாவில் கெளரவிக்கப்பட்டது.

தி டெரரிஸ்ட் என்ற அந்தப் படம் ராஜீவ்காந்தி படுகொலைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். 100 நிமிடங்கள் ஓடக்கூடிய திடெரரிஸ்ட் மிகவும் அற்புதமாக இருந்ததாக ஜான்மால்கோவிக் என்ற திரைப்பட விமர்சகர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இந்தப் படம் சந்தோஷ் சிவனின் மாஸ்டர் பீஸ். மிகவும் சிரமப்பட்டு அவர் இப் படத்தை எடுத்திருக்கிறார். படத்தில்கதாநாயகியாக நடித்திருந்த இளம் நடிகையான ஆயிஷா தர்கர் ஒவ்வொரு பிரேமிலும் அதிக சிரத்தையுடன் நடித்திருக்கிறார் என்றார்.

சந்தோஷ் சிவன் ஏற்கனவே 1998 ல் கெய்ரோ, டோர்னாடோ திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டுள்ளார்.

இதேபோல, ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் லான்ட் நகரில் 49 வது மெல்போர்ன் திரைப்பட விழா நடந்தது. இதில் 40 நாடுகளைச் சேர்ந்த 200 படங்கள்திரையிடப்பட்டன.

இதில் மூன்று இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. ஸ்பிலிட் வொய்ட் ஓபன், மரண சிம்மாசனம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரசிகர்களை மிகவும்கவர்ந்தது

திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட, சல்மான்கான் நடித்த ஹம் தில் தி சுகே சனம் திரைப்படம் மெல்போர்னில் வசிக்கும் இந்திய மக்களை மிகவும்கவர்ந்தது. திரையிடப்பட்ட இந்தியப் படங்களில் சிறந்த படமாக இதுவும்பாராட்டுப் பெற்றது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+