ஆப்கன் மோதலில் 60 தலிபான் வீரர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் அகமது ஷா மசூத் தலைமையில் இயங்கும் வீரர்கள் தாக்குதல் நடத்தி 60 தலிபான் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை கொன்று, வடக்குஆப்கானிஸ்தானில் சலாங் பகுதியில் சில இடங்களைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது.
இந்த சண்டையில், 60 தலிபான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 30 க்கும் மேற்பட்ட தலிபான் வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்அமெரிக்காவின் வாய்ஸ் ஆப் அமெரிக்கா செய்தியில் கூறப்பட்டது.
இந்த செய்தி குறித்து தலிபான் இயக்கம் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை தலிபான் மத அமைப்புதனது அதிகாரத்தில் வைத்துள்ளது. பிற பகுதிகளில் அரசுக்கு ஆதரவான மசூத் பிரிவினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications