தற்கொலை கூட செய்ய நினைத்தேன்: குரேனியே பேட்டி
Subscribe to Oneindia Tamil
ஜோகாணஸ்பர்க்:
மேட்ச் பிக்சிங்கில் சிக்கிய பிறகு தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தனது மன நிலை குலைந்து போனதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின்முன்னாள் கேப்டன் ஹன்சி குரேனியே கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க டிவியான எம்-நெட் சூப்பர்ஸ்போர்டுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். பே சேனலான இந்த டிவியில் வரும் 24ம் தேதி முதல் 3 இந்த தொடர்3 நாட்களுக்கு ஒளிபரப்பப்படும்.
இதில் தனது தற்கொலை சிந்தனை, கொலை மிரட்டல்கள், நாட்டை விட்டு ஓடிப் போக நினைத்தது ஆகியவை குறித்தும் ஹன்சி பேசியிருப்பதாகத் தெரிகிறது.இந்த பேட்டி ஹன்சியின் வீட்டிலேயே படம் பிடிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக் ஹேஸ்மேன் தான் குரேனியேவை பேட்டி கண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications