எந்த நிமிடமும் ராஜ்குமார் விடுதலையாகலாம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரும், அவரது உறவினர்களும் செவ்வாய்க்கிழமை இரவுக்குள் விடுதலை செய்யப்படலாம். தமிழ் நாடு அரசு மூலம் வரும்அந்த நல்ல செய்திக்காகக் காத்திருக்கிறோம் என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறையினருடன் ஆலோசனை நடத்தியபின் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு மாநிலஅரசுகளின் சார்பில் காட்டுக்குச் சென்றுள்ள அரசு தூதர் நக்கீரன் கோபால், வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர் எப்போது சென்னைதிரும்புவார் என்று தெரியவில்லை.

வீரப்பன், நடிகர் ராஜ்குமாரையும், அவரது உறவினர்களையும் நன்றாகக் கவனித்துக் கொள்கிறான். அவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.

தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸூம், ம.திமுக பொதுச்செயலாளர் வைகோவும் வீரப்பனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என்று கூறியுள்ளனர். வீரப்பனின் கோரிக்கைகளுக்கு மட்டும் தான் மாநில அரசுகள் பதிலளிக்க முடியும்.

வீரப்பனின் கோரிக்கைகளில் பொதுமன்னிப்பு பற்றி எதுவும் கூறப்படவில்லை என்றார்.

இந்நிலையில் மைசூர் மற்றும் பெங்களூரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

டிஜிபி தினகர் பேட்டி:

சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தி செல்லப்பட்டுள்ள நடிகர் ராஜ்குமார் செவ்வாய்க்கிழமை இரவுக்குள் எந்த நிமிடமும் விடுதலை செய்யப்படலாம்என்று கர்நாடி.ஜி.பி.தினகர் தெரிவித்தார்.

அவர், நடிகர் ராஜ்குமார் விடுதலை குறித்து மேலும் கூறுகையில், வீரப்பன், நடிகர் ராஜ்குமார், அவரது உறவினர்கள் கோவிந்தராஜ், நாகப்பா, நாகேஷ்ஆகியோரை ஜூலை மாதம் 30 ம் தேதி கடத்திச் சென்றான்.

காட்டில் நடிகர் ராஜ்குமார் மற்றும் அவரது உறவினர்கள் பாதுகாப்பாக எந்த ஆபத்துமின்றி இருக்கிறார்கள். குறிப்பாக ராஜ்குமார் மிகஆரோக்கியமாக இருக்கிறார். அவருக்கு நல்ல உணவு வகைகளை கொடுத்து உபசரித்து வருகிறான் வீரப்பன்.

அரசுத் தூதராகச் சென்றுள்ள நக்கீரன் கோபால் வீரப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை இரவு அல்லது புதன்கிழமைகாலைக்குள் சென்னை திரும்புவார்.

இதற்கிடையே செவ்வாய்க்கிழமை இரவுக்குள் நடிகர் ராஜ்குமார் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் டி.ஜி.பி.தினகர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+