காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு
ஸ்ரீநகர்:
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாதிகள் சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம்முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் பரூக் அப்துல்லா, கவர்னர் கிரிஷ் சந்திர சக்ஸேனா ஆகியோர் உயர் ராணுவ அதிகாரிகள், போலீஸாருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துஆலோசனை நடத்தினர்.
ஜம்மு காஷ்மீரில் வாழும் மக்களுக்கு ஹிஸ்புல் அமைப்பின் சண்டை நிறுத்தம் வாபஸ் அறிவிப்பால் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்பதைக்கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர வேண்டுமானால்,அதில் பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டும் என்று சண்டை நிறுத்தம் செய்திருந்தஹிஸ்புல் அமைப்பினர் கூறியிருந்தனர். ஆனால் இதை இந்தியா நிராகரித்ததால், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன் சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.
இதுகுறித்து அமைப்பின் தலைவர் சையது சாலவுதீன் கூறுகையில், எங்களது யோசனையை இந்தியா ஏற்றிருந்தால் காஷ்மீரிலிருந்து செயல்படும் இதரதீவிரவாதக் குழுக்களையும், சண்டை நிறுத்தம் செய்யுமாறு கூறி பேச்சு வார்த்தைக்கு அழைத்து வந்திருப்போம். ஆனால், எங்களது நிபந்தனைகளை இந்தியஅரசு கேட்காததால் சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெறுகிறோம் என்று கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications