முழுசா 3 மாசம் ஆகல.. அன்புமணி விஜய் அண்டர்ஸ்டாண்டிங்! சீண்டிய தாய் சிறுத்தை.. வேதனையில் வன்னியரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக அரசை வெளிப்படையாக விமர்சிப்பதோடு திமுகவுடன் கூட்டணியில் தொடர்கிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் பேசியது விஜயை கோபப்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தவெக தலைவர் விஜயுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நெருக்கம் காட்டி வரும் நிலையில் அமைச்சரவையில் சேர திரைமறைவில் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக சொல்கின்றனர். இந்த நிலையில் திருமாவின் செயல்பாடுகளால் தனது அமைச்சர் பதவி பறிபோய் விடுமோ? என வன்னியரசு வேதனையில் இருப்பதாக சொல்கின்றனர்.

2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்தாலும், தனிப் பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி அரசை அமைக்க வேண்டிய சூழல் விஜய்க்கு ஏற்பட்டது. இதை அடுத்து காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கிறார் விஜய்.

PMK TVK VCK

அதே நேரத்தில் கட்சியின் எதிர்கால நலன் மற்றும் ஆட்சியை முழுமையாக நடத்த வேண்டும் என்பதற்காக சில காய்களை நகர்த்தி வருகிறார் விஜய். அந்த வகையில் சமீபகாலமாக தமிழக வெற்றி கழகத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இணைந்து வருகின்றனர்.

தவெக

குறிப்பாக அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு இணைந்து வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த சூழலில் பாமகவும் தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்கு வந்து அமைச்சரவையில் இடம் பெறலாம் என சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் வீட்டிற்கே சென்று விஜய் சந்தித்து பேசினார்.

அன்புமணி ராமதாஸ்

தொடர்ந்து சில நாட்களில் சென்னை தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தை சந்தித்த அன்புமணி நீண்ட நேரமாக அரசியல் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி தமிழக வெற்றிக் கழக அரசை வெகுவாக பாராட்டி பேசினார். இதற்கிடையே பாமக தமிழக வெற்றிக் கழகம் இடையே கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் மறைமுகமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் சௌமியா அன்புமணிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்றும் சொல்கின்றனர்.

திருமாவளவன்

இதற்கெல்லாம் காரணம் திருமாவளவன் தான்.. திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் தற்போது தமிழக வெற்றி கழகம் பக்கம் சென்றிருக்கும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளையும் தவெக தனது பக்கம் இருக்க முயற்சித்து வருகிறது. அதே நேரத்தில் கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக அரசை விமர்சித்து வருகின்றன.

திமுக கூட்டணி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் நிலையில் தமிழக வெற்றிக்கழகம் தொடர்பாக எந்தவித கருத்துக்களையும் தெரிவிப்பதில்லை. மேலும் எம்எல்ஏக்கள் இல்லாத வைகோவும் விஜயை தொடர்ந்து பாராட்டிய வருகிறார். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனோ, "தவெக வெற்றி பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் அல்ல" என்றும், "திமுக கூட்டணியில் விசிக இல்லை என திமுக சொல்லிவிட்டது", "திமுகவுடன் நட்புறவு தொடர்கிறது" என மாற்றி மாற்றி பேசி வருகிறார்.

விஜய் கோபம்

அமைச்சரவையில் பங்கு கொடுத்தும் திருமாவளவன் குழப்பமான மனநிலையில் இருப்பதோடு அரசையும் சில விவகாரங்களில் விமர்சித்து பேசுவதை விஜய் விரும்பவில்லை. இரண்டு எம்எல்ஏக்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுத்தும் திருமா தொடர்ந்து விமர்சித்து வருவது கூட்டணிக்கு நல்லதல்ல என நினைக்கும் விஜய் பாமகவை கூட்டணிக்குள் அழைத்து வர திட்டமிட்டுள்ளார் என்கின்றனர். அதுமட்டுமில்லாமல் வேறு சில கட்சிகளையும் கூட்டணிக்கு அழைத்து வர பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

தவெக - பாமக கூட்டணி

சிங்கிள் எம்எல்ஏ இருந்தால் கூட போதும் ஆட்சியை வெற்றிகரமாக நடத்தி விடலாம் என விஜய் திட்டமிட்டு இருக்கிறார் என்கின்றனர். இந்த நிலையில் பாமக உடன் தமிழக வெற்றிக்கழகம் நெருக்கம் காட்டுவதை தெரிந்து கொண்டே திருமாவளவன் பொதுவெளியில் இப்படி பேசி வருகிறார் என்கின்றனர் சிறுத்தை கட்சியினர். அமைச்சரவையில் விசிக பங்கேற்பது எட்டாக் கனியாக இருந்த நிலையில் அதனை சாத்தியப்படுத்தி கொடுத்திருக்கிறார் விஜய்.

வன்னியரசு

அது மட்டும் அல்லாமல் எம்எல்ஏ ஆன முதல் தேர்தலிலேயே தனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் சுறுசுறுப்பாக ஆய்வு மேற்கொண்டு வந்தார் அமைச்சர் வன்னியரசு. திருமா கூட சில நேரங்களில் விஜய் விமர்சித்தாலும் ஒருபோதும் வன்னியரசு விஜயை விமர்சிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது திருமாவின் செயல்பாடுகளால் விசிக - தவெக கூட்டணி உடைந்து விட்டால் தனது அமைச்சர் பதவி பறிபோய் விடுமோ? என்ற அச்சத்தில் அவர் இருக்கிறார் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+