குற்றாலத்தில் குளு குளு ... அருவிகளில் வெள்ளம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை:
குற்றாலத்தில் சீசன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர்அதிகமாக கொட்டுகிறது. ஐந்தருவியில் வெள்ளம் கொட்டுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்த்தில் குற்றாலத்தில் சீசன் தொடங்கும்.வழக்கம்போலவே இந்த ஆண்டும் சீசன் குறிப்பிட்ட நாளில் துவங்கியது. இடையில்சில நாட்களுக்கு சீசன் டல் அடித்தது. நல்ல வெயில் அடித்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே குற்றாலத்தில் நல்ல மழை பெய்து வருகிறது.இதையடுத்து அனைத்து அருவிகளிலும் அதிக அளவில் நீர் கொட்டியது. ஐந்தருவியில்வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை முதலே குற்றாலத்தில் சாரல் மழை இருந்து வருகிறது. மறுபடியும்குற்றாலம் குளு குளுவாகி விட்டதால் சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வருவார்கள்என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications