10, பிளஸ் 2 பாஸ் செய்ய குறைந்தபட்ச மார்க் நிர்ணயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் பாஸ் செய்ய குறைந்தபட்ச மார்க் நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் பரமசிவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

10-ம் வகுப்பு, பிளஸ் 2, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் அரசுத் தேர்வுத்துறையால் நடத்தப்பட்டு வருகின்றன.

2000-01-ம் கல்வி ஆண்டு முதல் இத் தேர்வுகளில் தேர்ச்சி பெற பிராக்டிகல் மற்றும் தியரிதேர்வுகளில் தனித்தனியே குறைந்தபட்ச மதிப்பெண்களை அரசு நிர்ணயித்துள்ளது.

தற்போது பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடத்திலும் 200-க்கு 70 மதிப்பெண்கள்எடுக்கவேண்டும் என்ற நிலை உள்ளது. புதிய மதிப்பெண் நிர்ணயத்தில் இந்த 70 மதிப்பெண் என்பதில் எந்தமாற்றம் இல்லை.

ஆனால், தியரிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 150 மதிப்பெண்ணில் குறைந்தது 40 மதிப்பெண்ணும்,பிராக்டிகல்லில் 50-க்கு குறைந்தபட்சம் 30 மதிப்பெண்ணும் எடுக்கவேண்டும்.

மெட்ரிக்குலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பொதுத் தேர்வுகளில் அறிவியல் பாடத்துக்கு 300மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தியரி முதல் தாளுக்கு 100 மதிப்பெண்களும், தியரி இரண்டாம்தாளுக்கு 100 மதிப்பெண்களும், பிராக்டிகல்லுக்கு 100 மதிப்பெண்களும் வழங்கப்படுகின்றன.

இப் பாடத்தில் தேர்ச்சி பெற இரு தியரி தாள்களிலும் சேர்த்து குறைந்தது 70 மதிப்பெண்களும்,பிராக்டிகல்லில் 100-க்கு 35 மதிப்பெண்களும் பெறவேண்டும். அதாவது இப் பாடத்தில் தியரிமற்றும் பிராக்டிகல் இரண்டிலும் சேர்த்து 300-க்கும் 105 மதிப்பெண்கள் பெறவேண்டும்.

இப் புதிய குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணய முறை நடப்புக் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும்என்றார் பரமசிவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+