எலிசபெத் டெய்லருக்கு நிமோனியா
லாஸ் ஏஞ்சல்ஸ்:
புகழ் பெற்ற நடிகை எலிசபெத் டெய்லர் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ஒரு வாரம் அங்கு தங்கிசிகிச்சை எடுப்பார்.
ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகை எலிசபெத் டெய்லர். வயது 68. இவர் இரண்டு முறை ஆஸ்கர் விருதைப் பெற்றவர். 1960 ம் ஆண்டு பட்டர்பீல்டு என்றதிரைப்படத்தில் விபச்சாரி வேடமேற்று மிகச் சிறப்பாக நடித்தார். அதே போல் 1966 ம் ஆண்டு ஹூ ஈஸ் அப்ரைடு ஆப் வெர்ஜினியா உல்ப் என்ற படத்தில்நடித்தார்.
1995 ம் ஆண்டு இவர் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதயக் கோளாரினால் பாதிக்கப்பட்டார். அப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுதொடர்ந்து மூன்று மாதம் சிகிச்சை பெற்று வந்தார். 1997 ம் ஆண்டு அறுவைசிகிச்சை செய்து கொண்டார். அதன்பிறகு அடிக்கடி நோய்வாய்ப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார்.
கடந்த வருடம் ஆகஸ்ட் 19 ம் தேதி தன் பெல் ஏர் மான்சன் வீட்டில் கால்தவறிக் கீழே விழுந்தார். அப்போது 10 நாட்கள் மருத்துவமனையில் தங்கிசிகிச்சை பெற்றார். அவருக்கு கடந்த ஒரு வருடமாக முதுகு வலி இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது அவருக்கு நிமோனியா ஏற்பட்டுள்ளது. நிமோனியாவால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த வெள்ளிக்கிழமை பேவர்லி ஹில்ஸ்பகுதியில் உள்ள கெடார்-சினாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அங்கு ஒரு வாரம் தஙகி சிகிச்சை எடுப்பார்.












Click it and Unblock the Notifications